பிரசன்ன வேங்கடாஜலபதி கோயில்,துறையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரசன்ன வேங்கடாஜலபதி கோயில்,திருச்சி மாவட்டம்,துறையூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் பெருமாள் மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலின் தெய்வம்  இந்து கடவுளான  விஷ்ணு ஆவார். கரிகாலனின் பேரன் இக்கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது,இவருக்கு  இங்கே வழிபாடும் உண்டு .

கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒருபகுதியாக விளங்கும் 27கி.மீ. நீளம் உள்ள கொல்லிமலை தொடரில் பச்சைமலை, குறிச்சிமலை, பெருமாள்மலை ஆகியவை உள்ளன. இக்குன்றுகளில் ஒன்றான பெருமாள் மலையில்தான் கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம் கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமண கோலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி சேவை சாதிக்கிறார். துறையூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் பெரம்பலூர் சாலையில் உள்ளது பெருமாள் மலை. அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. மலைப்பாதை (Ghat Road)யில் கார், வேன் மூலம் இத்தலத்தை சென்றடையலாம்.

பூமி மட்டத்தில் இருந்து 960 அடி உயரத்தில் இத்தலம் மலைமேல் அமைந்துள்ளது. படிக்கட்டுகளின் வழியாக சென்றால் 1532 படிக்கட்டுகளையும் ஏழு சிறிய குன்றுகளையும் தாண்டிச் சென்று இத்தலத்தை அடையலாம்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]