பிரக்ன்யா மோகன்
| தனிநபர் தகவல் | |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| பிறப்பு | 19 அக்டோபர் 1994 அங்க்லேஷ்வர், குஜராத், இந்தியா |
| கல்வி | இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் |
| தொழில் | முத்திறன் போட்டி வீராங்கனை, பட்டயக் கணக்காளர் |
| விளையாட்டு | |
| விளையாட்டு | நெடுமுப்போட்டி |
பிரக்ன்யா மோகன் (Pragnya Mohan பிறப்பு 19 அக்டோபர் 1994) குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நெடுமுப்போட்டி வீராங்கனை ஆவார். 2022-ல் பர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் நெடுமுப்போட்டி அறிமுகத்தை இவர் முன்னின்று நடத்தினார். உலக அளவில் இந்தியாவிலிருந்து மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள வீராங்கனை இவரே. ஒலிம்பிக் போட்டிகளில் நெடுமுப்போட்டியில் அறிமுகமாவதற்கு இந்தியாவின் சிறந்த தேர்வாக இவர் பரவலாகக் கருதப்படுகிறார். 2019-ல், நெடுமுப்போட்டி உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் மற்றும் ஒரே நெடுமுப்போட்டி வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றார். இவர் தற்போதைய மற்றும் பலமுறை தெற்காசிய, தேசிய நெடுமுப்போட்டி வாகையாளர் ஆவார். மேலும் , தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2015-ல், மாநிலத்தின் உயரிய விளையாட்டு விருதான ஏகலவ்யா விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இவர் இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகத்தின் பட்டயக் கணக்காளர் ஆவார்.
ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை
[தொகு]பிரக்ன்யா மோகன் 19 அக்டோபர் 1994 அன்று குஜராத்தின் அங்கலேஷ்வரில் பிறந்தார். [1] இவர் இரண்டு வயதில் நீச்சல் கற்கத் தொடங்கினார், மோடிகார்ட் நகரியத்திலுள்ள் நீச்சல் குளத்தில் கற்றுக்கொண்டார். [2] இவரது திறமையைக் கண்ட இவரது பெற்றோர், 2002 இல் இவரை 45 நாள் பயிற்சி முகாமுக்கு அனுப்பினர். நீச்சலின் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றவுடன், மூன்றாம் வகுப்பு மாணவியாக இருந்தபோதிலும், தனது பள்ளி ஏற்பாடு செய்த தொலைதூர நீச்சல் போட்டியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை வென்றார். [3] இவர் எட்டு வயதில் அல்வாரில் நடந்த நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய மேற்கு மண்டலப் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். [4] 2003 ஆம் ஆண்டில், இவரது குடும்பம் குஜராத்தின் அதுலுக்கு குடிபெயர்ந்த பிறகு, இவர் பயிற்சியாளர் இல்லாமல் அதுல் லிமிடெட் நகரியத்தில் சுயமாகப் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. பிரக்ன்யா மோகன் மாநில அளவிலான போட்டிகளில் வெண்கலத்திலிருந்து தங்கப் பதக்கம் வரை வென்றார். 2006 ஆம் ஆண்டில், இவர் முதல் முறையாக நீச்சல் தேசியப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sivakumar & Ram 2021, ப. 238.
- ↑ Sivakumar & Ram 2021, ப. 230.
- ↑ Sivakumar & Ram 2021, ப. 231.
- ↑ Sivakumar & Ram 2021, ப. 232.
- ↑ Sivakumar & Ram 2021, ப. 233.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- உலக நெடுமுப்போட்டியில் பிரக்ஞா மோகனின் வீராங்கனை சுயவிவரம்
- டுவிட்டரில் பிரக்ன்யா மோகன்