பிரகாஷ் பெலவாடி
பிரகாஷ் பெலவாடி Prakash Belawadi | |
---|---|
2020-21 இல் பர்வா நாடகத்தில் பெலவாடி | |
பிறப்பு | 3 மார்ச்சு 1961 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | விசுவேசுவராய பொறியியல் கல்லூரிப் பல்கலைக்கழகம், பெங்களூர் |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மதராஸ் கஃபே தி காஷ்மீர் பைல்ஸ் எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு |
வாழ்க்கைத் துணை | சந்திரிகா |
பிள்ளைகள் | 2 |
பிரகாஷ் பெலவாடி (Prakash Belawadi, பிறப்பு: 3 மார்ச் 1961) கன்னட நாடகக் கலைஞரும், திரைப்பட இயக்குநரும், ஊடக ஆளுமையும் ஆவார்.[1] இவர் ஓர் ஆசிரியரும், சமூக ஆர்வலரும், பத்திரிகையாளரும் ஆவார். பெங்களூரைச் சேர்ந்தவர்.[2] இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல கருத்தரங்குகளிலும் , மாநாடுகளிலும், விழாக்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் பல நிகழ்வுகலும், டெட் மாநாடுகளிலும் ஊக்கமளிக்கும் பேச்சாளராக உள்ளார்.[3][4][5][6] பெலவாடி 2010 முதல் பெங்களூர் பன்னாட்டுக் குறும்பட விழாவின் நிறுவனக் குழுவின் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.[7]
தொடக்க வாழ்வு
[தொகு]பெலவாடி பெங்களூரில் நாடகக் கலைஞர் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[8] இவரது தந்தை 'மேக்கப் நானி' என்று பிரபலமாக அழைக்கப்பட்ட நஞ்சுண்டய்யா நாராயண் (1929-2003) கன்னடத் திரையரங்கில் ஒரு ஆளுமையாக இருந்தார். தாயார், பார்கவி நாராயண், ஒரு புகழ்பெற்ற திரைப்பட, நாடகக் கலைஞர்.[9] 1983-இல் விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார்.[10][11]
இவர் நடித்த சில திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2013 | மதராஸ் கஃபே | பாலா | இந்தி | |
2014 | உத்தம வில்லன் | மரு. டி. எஸ். | தமிழ் | |
2017 | டேக் ஆஃப் | ராஜன் மேனன் | மலையாளம் | |
2017 | அவள் | யோசுவா | தமிழ்[12]/இந்தி | இருமொழித் திரைப்படம் |
2019 | தற்செயலான பிரதம மந்திரி | எம். கே. நாராயணன் | இந்தி | |
2019 | சாஹோ | சிண்டே | தெலுங்கு/இந்தி | இருமொழித் திரைப்படம் |
2020 | சகுந்தலா தேவி | பிசாவ் மித்திரா மணி | இந்தி | |
2020 | சூரரைப் போற்று | பிரகாஷ் பாபு | தமிழ் | |
2021 | தி காஷ்மீர் பைல்ஸ் | டாக். மகேசுகுமார் | இந்தி |
விருதுகள்
[தொகு]- பிரகாஷ் பெலவாடி எழுதி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டம்பிள், 2003 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.[13]
- கலைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2003 ஆம் ஆண்டு கர்நாடக அரசு ‘பிரதிபா பூஷன்’ பட்டத்தை வழங்கியது.[14]
- ஆங்கில, கன்னட மொழி நாடகத்திற்கான பங்களிப்பிற்காக கர்நாடக நாடக அகாடமி விருது (2011-12) பெற்றார்.[15]
- சிட்னி, பெல்வோ நாடக நிறுவனம் தயாரித்த எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான ஆத்திரேலியாவின் ஹெல்ப்மேன் விருது (2019) வழங்கப்பட்டது.[16][17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""I Can Quit Acting, Not Theatre" Says Actor-Director Prakash Belawadi". starofmysore.com. 2 August 2017.
- ↑ Patel, Aakar (31 August 2013). "A restless Renaissance Man".
- ↑ "TEDx talks by Prakash Belwadi". Simply Life India Speakers Bureau.
- ↑ "Interactive Movies, Prakash Belawadi, TEDxSIBMBengaluru". YouTube.
- ↑ "When Tomorrow Comes, Prakash Belawadi, TEDxBITBangalore". YouTube.
- ↑ "Identities," Are you really what you are ? ", Prakash Belawadi, TEDxNMIMSBangalore". YouTube.
- ↑ "Prakash Belawadi, A mentor at BISFF'19". Bengaluru International Short Film Festival. Archived from the original on 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
- ↑ "BEST OF BANGALORE - Innovation Edition". பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
- ↑ "Family time in Kannada films". Deccan Herald. 8 November 2019.
- ↑ "Prakash Belawadi - Ward No 142 - Loksatta Party (LSP) Candidate - BBMP Elections". My Bengaluru. 26 March 2010. Archived from the original on 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
- ↑ "Alumni of UVCE".
- ↑ "Mani Ratnam isn't a fan of horror films: Milind Rau".
- ↑ "The 50th National Film Awards". outlookindia.com.
- ↑ "Pratibha Bhushan title is conferred on Nikhil Joshi and Prakash Belawadi (culture)". The Times of India. 19 August 2003. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Honour-for-Sachin-Saurav-and-Kumble/articleshow/136758.cms.
- ↑ "Venkatswamy, Belawadi get Nataka Academy Awards". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ "Best Male Actor in a Play, Helpmann Awards 2019".
- ↑ "Helpmann awards 2019: Belvoir sweeps stage industry accolades over two nights". தி கார்டியன். 15 July 2019.