பிரகாஷ் அமிர்தராஜ்
| நாடு | இந்தியா | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| வாழ்விடம் | என்சினோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா | |||||||||||||
| பிறப்பு | அக்டோபர் 2, 1983 லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா | |||||||||||||
| உயரம் | 1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்) | |||||||||||||
| தொழில் ஆரம்பம் | 2003 | |||||||||||||
| விளையாட்டுகள் | வலது கை பழக்கம் | |||||||||||||
| பரிசுப் பணம் | $460,805 | |||||||||||||
| ஒற்றையர் போட்டிகள் | ||||||||||||||
| சாதனைகள் | 20–33 | |||||||||||||
| பட்டங்கள் | 0 | |||||||||||||
| அதிகூடிய தரவரிசை | எண். 154 (15 சூன் 2009) | |||||||||||||
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | ||||||||||||||
| ஆத்திரேலிய ஓப்பன் | Q3 (2008) | |||||||||||||
| பிரெஞ்சு ஓப்பன் | Q1 (2009, 2010) | |||||||||||||
| விம்பிள்டன் | Q3 (2009, 2010) | |||||||||||||
| அமெரிக்க ஓப்பன் | 1R (2002) | |||||||||||||
| இரட்டையர் போட்டிகள் | ||||||||||||||
| சாதனைகள் | 12–21 | |||||||||||||
| பட்டங்கள் | 0 | |||||||||||||
| அதியுயர் தரவரிசை | எச். 119 (26 அக்டோபர் 2009) | |||||||||||||
| பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | ||||||||||||||
| ஆத்திரேலிய ஓப்பன் | 2R (2010) | |||||||||||||
| விம்பிள்டன் | 3R (2009) | |||||||||||||
| அமெரிக்க ஓப்பன் | 1R (2002) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||
| இற்றைப்படுத்தப்பட்டது: 3 சூலை 2022. | ||||||||||||||
பிரகாஷ் அமிர்தராஜ் (Prakash Amritraj, பிறப்பு: 2 அக்டோபர் 1983) என்பவர் ஒரு இந்திய-அமெரிக்க முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடியுள்ளார். [1] இவர் இந்திய முன்னாள் டென்னிசு வீரரான விஜய் அமிர்தராஜின் மகன் ஆவார்.
பின்னணி
[தொகு]பிரகாஷ் அமிர்தராஜ் இந்திய டென்னிசு வீரரான விஜய் அமிர்தராஜ் மற்றும் இலங்கைத் தமிழரான சியாமளா ஆகியோரின் மகனாவார். [2] [3] [4]
பிரகாஷ், சக டென்னீசு பயிற்சியாளர் ஸ்டீபன் அமிர்தராஜின் தாயாதி ஆவார். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் தொழில்முறை டென்னிஸ் வீரர்களான ஆனந்த், அசோக் ஆகியோர் இவரது சித்தப்பாக்கள் ஆவர். பிரகாஷுக்கு விக்ரம் (பிறப்பு: 1987) என்ற ஒரு தம்பி உண்டு.
இவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்காக இரண்டு ஆண்டுகள் டென்னிசு விளையாடினார். 2002 ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்டேட்ஸ் டென்னிஸ் அசோசியேஷன் (யுஎஸ்டிஏ) 18 வயது சிறுவர்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார் [5]
தொழில்முறை வாழ்க்கை
[தொகு]2007 ஆம் ஆண்டில், அமிர்தராஜ் இந்தியாவில் தொடர்ந்து மூன்று ஐடிஎஃப் புரோ சுற்று போட்டிகளை வென்றார், மூன்று இறுதிப் போட்டிகளிலும் கரண் ரஸ்தோகியை வீழ்த்தினார்.
2008 சூலை 14 அன்று அமிர்தராஜ் தனது முதல் ஏ.டி.பி. சுற்றுப் பயண இறுதிப் போட்டியில் விளையாடினார். அப்போது பிரான்சின் ஃபேப்ரிஸ் சாண்டோரோவிடம் நேர் செட்களில் தோல்வியடைந்தார். [6]
2010 ஆகத்து முதல் 2012 ஆகத்து வரை, அமிர்தராஜ் விளையாட்டுச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அவர் மைதானத்திற்குத் திரும்பினார், கலிபோர்னியாவின் ஆப்டோஸில் நடந்த 2012 கொமெரிகா பேங்க் சேலஞ்சரில் ஒரு தகுதிச் சுற்றில் வைல்ட் கார்டாகப் போட்டியிட்டார்.
பிரகாஷ் அமிர்தராஜ் 2016 ஆம் ஆண்டு டென்னிஸ் சேனலின் முதன்மை பயண நிருபர்களில் ஒருவராகவும், போட்டிக்கு இடையேயான பகுப்பாய்வாளராகவும், ஸ்டுடியோ மற்றும் உலகளாவிய நிகழ்வுகளில் தொகுப்பாளராகவும் டென்னிஸ் சேனலின் ஊழியராக சேர்ந்தார். 2021 பிப்ரவரியில், அவரது ஒப்பந்தம் 2023 வரை கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டது [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Players | ATP Tour | Tennis". Archived from the original on 11 October 2011. Retrieved 20 September 2011.
- ↑ Lidz, Franz. "Tennis Player Vijay Amritraj Is As Fine On Film As He Is On The Court". Sports Illustrated. Archived from the original on 28 September 2013. Retrieved 29 June 2013.
- ↑ "Honeymoon over for Amritraj". The Southeast Missourian. Retrieved 29 June 2013.
- ↑ "Amritrajs' Big-Fat Wedding In Colombo". Fashion Scandal. 4 November 2012. Archived from the original on 3 July 2013. Retrieved 29 June 2013.
- ↑ "Prakash Amritraj Captures 18s Championship With Four Set Win Over Doug Stewart". United States Tennis Association. 11 August 2002 இம் மூலத்தில் இருந்து 24 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230624154251/https://ustaboys.com/news/2002/aug/11/prakash-amritraj-captures-18s-championship-with-four-set-win-over-doug-stewart/.
- ↑ "ATP Tour profile". Archived from the original on 11 October 2011. Retrieved 20 September 2011.
- ↑ "Tennis Channel Career". Archived from the original on 17 February 2021. Retrieved 26 March 2021.