பிரகாரம்

பிரகாரம் (சமசுகிருதம்: प्राकारम्) என்பது இந்தியக் கட்டடக்கலையில் இந்துக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தைச் சூழ்ந்துள்ள வெளிப்பகுதி ஆகும்.[1] இது மூடப்பட்ட அல்லது திறந்த அமைப்புடையதாக இருக்கலாம். ஆனால் பொதுவாக உள் பிரகாரமானது மூடப்பட்டதாக இருக்கும். பெரும்பாலும் பெரிய கோவில்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரகாரங்கள் கொண்டிருக்கும்.[2]

குறிப்புகள்[தொகு]
- ↑ சிங், பிரான்சிசு டி கே. (1995). கட்டிடக்கலை பார்வை அகராதி (ஆங்கிலம்). நியூயார்க்கு: சான் வில்லி அண்ட் சன்சு. பக். 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-28451-3.
- ↑ "இந்திய கலையின் கலைச்சொற்கள்". art-and-archaeology.com. http://www.art-and-archaeology.com/india/glossary1.html. பார்த்த நாள்: 2007-01-08.