பிரகாசு கௌர்
பிரகாசு கௌர் | |
|---|---|
| பிறப்பு | சலந்தர், பஞ்சாப், இந்தியா |
| பணி | சமூக சேவகர் |
| விருதுகள் | பத்மசிறீ |
பிரகாசு கௌர் (Prakash Kaur (social worker) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சலந்தர் நகரத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். பீபி பிரகாசு கௌர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். பஞ்சாபில் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சமூக சேவைக்காக இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1]
இவரே ஒரு கைவிடப்பட்ட பெண்ணாகவும் தெருவில் விடப்பட்ட குழந்தையாகவும் இருந்தார். மேலும் நாரி நிகேதன் அறக்கட்டளையின் இல்லத்தில் வளர்க்கப்பட்டார். கைவிடப்பட்ட பெண்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக தனது சொந்த வீட்டைத் தொடங்க வேண்டுமென்று 1993 ஆம் ஆண்டில் நாரி நிகேதனிலிருந்து வெளியேறினார். எட்டு பெண்களுடன் சேர்ந்து இல்லத்தைத் தொடங்கினார், படிப்படியாக கைவிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.[2][3] பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தெருவில் கைவிடாமல், மாறாக அவர்களை தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்று பிரகாசு கௌர் ஊக்குவிக்கிறார்.[4]
ரிலையன்சு தொழில்கள் நிறுவனத்திடமிருந்து இவருக்கு ரியல் ஈரோசு விருது வழங்கப்பட்டது.[5]
விருதுகள்
[தொகு]- பத்மசிறீ
- அனைத்துலக பெண்கள் நாள் விருது (மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சதா இவ்விருதை வழங்கினார்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Agnihotri Chaba, Anju (2021-01-26). "Mother to 80 abandoned girls, Punjab social worker is awarded Padma Shri". The Indian Express. Retrieved 2024-12-01.
- ↑ "Prakash Kaur: A mother to 100 abandoned girls feted with Padma Shri". The Tribune (in ஆங்கிலம்). Retrieved 2024-12-01.
- ↑ "Icon Detailed Description". Drishti IAS (in ஆங்கிலம்). Retrieved 2024-12-01.
- ↑ "ਬੀਬੀ ਪ੍ਰਕਾਸ਼ ਕੌਰ ਪਦਮਸ਼੍ਰੀ ਨਾਲ ਸਨਮਾਨਿਤ, 'ਸੁਪਨਾ ਬਸ ਇਕ ਸੜਕਾਂ ਕੰਢੇ ਨਾ ਰੁਲੇ ਕੋਈ ਧੀ'". Daily Post India (in பஞ்சாபி). 10 November 2021. Retrieved 28 January 2025.
- ↑ Kumar, Vinay (9 November 2021). "बच्चियों का जीवन रोशन करने वाली बीबी प्रकाश कौर को पद्मश्री, राष्ट्रपति रामनाथ कोविंद ने किया अलंकृत". Dainik Jagran (in இந்தி). Retrieved 28 January 2025.