உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகத்ரத வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகத்ரத அரசமரபு
கி. மு. 1700–கி. மு. 682
வட கிழக்குப் பகுதியில் பிரகத்ரத அரசமரபால் ஆளப்பட்ட மகதம் கி. மு. 1100இல்
வட கிழக்குப் பகுதியில் பிரகத்ரத அரசமரபால் ஆளப்பட்ட மகதம் கி. மு. 1100இல்
தலைநகரம்இராஜகிரகம்
பேசப்படும் மொழிகள்வேத மொழி
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
• கி. மு. 1700
பிரகத்ரதர் (முதல் ஆட்சியாளர்)
• அண். கி. மு. 732 – கி. மு. 682
ரிபுஞ்ஜெயர் (கடைசி ஆட்சியாளர்)
வரலாறு 
• தொடக்கம்
கி. மு. 1700
• முடிவு
கி. மு. 682
முந்தையது
பின்னையது
செப்புத் திரள் பண்பாடு
ஜனபாதங்கள்
பிரத்யோதா வம்சம்
மகாஜனபதம்
தற்போதைய பகுதிகள்இந்தியா

பிரகத்ரத வம்சம் அல்லது மகாரத வம்சம் (Brihadratha or Maharatha) (சமக்கிருதம்: बृहद्रथ) பரத கண்டத்தின் வடக்கில் அமைந்த மகத நாட்டை ஆண்ட முதல் வம்சம் ஆகும். பிரகத்ரதன் என்பவர் இவ்வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். மகாபாரதம் மற்றும் புராணங்களின் படி, மகத மன்னர் உபரிச்சர வசுவின் ஐந்து மகன்களில் மூத்தவர் பிரகத்ரதன் எனும் ஜராசந்தன் ஆவார்.[1]பிரகத்ரதன் எனும் மன்னரின் பெயர் ரிக் வேதம் (I.36.18, X.49.6) காணப்படுகிறது.[2]. பிரகத்ரத வம்சத்தின் வேறு பெயர் ரவானி வம்சம் ஆகும். வட மொழியில் பிரகத்ரதன் என்பதற்கு பெரிய தேர்ப்படைத் தலைவர் எனும் மகாரதன் என்று பொருளாகும்.

வாழ்க்கை[தொகு]

பிரகத்ரதன் எனும் ஜராசந்தன், மகதத்தில் தன் அரச வம்சத்தை நிறுவினார். இவ்வம்சத்தின் இறுதி மன்னர் ரிபுன்யஜெயன் ஆவார். கிமு ஆறாம் நூற்றாண்டில் ரிபுன்யஜெயன் தனது அமைச்ச்ரால் கொல்லப்பட்டார்.[3] இத்துடன் பிரகத்ரத வம்சம் முடிவுற்றது.

ஜராசந்தன் குறித்தான செய்திகள் மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தில் உள்ளது. கிருஷ்ணரின் தாய்மாமான கம்சனின் மாமனார் ஜராசந்தன் ஆவார். கம்சனை கிருஷ்ணன் கொன்றதால், ஜராசந்தன், கிருஷ்ணனை மதுராவிலிருந்து துவாரகைக்கு விரட்டியடித்தார். பின்னாட்களில் கிருஷ்ணன் வீமன்க் கொண்டு ஜராசந்தனை மற்போரில் கொல்ல உதவினார்.

சில புராணங்கள் ஜராசந்தனின் இறப்பிற்குப் பிறகு அவரது சகோதரி அம்நா என்பவர் மகத நாட்டை ஆண்டார் எனக்கூறுகிறது. அக்னி புராணத்தின் படி, ஜராசந்தனுக்குப் பிறகு அவரது மகன் சாம்பவன் மகத நாட்டை ஆண்டார் எனக்கூறுகிறது[4] சில புராணங்கள் ஜராசந்தனுக்குப் பிறகு மகத நாட்டை ஆட்சி செய்த சகாதேவன் என்பவர் குருச்சேத்திரப் போரில் பாண்டவர் சார்பாக, கௌரவர்களுக்கு எதிராகப் போராடி மாண்டார் என சில புராணங்கள் கூறுகிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Bharatiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, pp.129–36
  2. Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p.102
  3. Sen 1999, ப. 112.
  4. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 80.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகத்ரத_வம்சம்&oldid=3642123" இலிருந்து மீள்விக்கப்பட்டது