பிரகதி வான்வெளி அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரகதி வான்வெளி அருங்காட்சியகம்
Pragati Aerospace Museum
நிறுவப்பட்டதுஆகத்து 2001 (2001-08)
அமைவிடம்இந்தியா, மகாராட்டிரம், நாசிக், ஒசார்
வகைவான்வெளி அருங்காட்சியகம்


சு-30எம்.கே.ஐ இந்தியா

பிரகதி வான்வெளி அருங்காட்சியகம் (Pragati Aerospace Museum) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாசிக் நகருக்கு வெளியே அமைந்துள்ளது. இதை இந்துசுத்தான் வான்வழி தொலையளவு பிரகதி அருங்காட்சியகம் என்றும் அழைக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இந்துசுத்தான் வான்வழி தொலையளவு நிறுவனம் அதன் தொழில்நுட்ப சாதனைகளையும் பாராட்டத்தக்கதான அதன் பயணத்தையும் வெளிப்படுத்த இந்த அருங்காட்சியகத்தைத் திறந்தது.

இந்துசுத்தான் வான்வழி தொலையளவு நிறுவனம் தயாரிக்கும் வானூர்திகளின் மாதிரிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சியில் இம்மாதிரிகள் உயர் கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்தன.

அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்[தொகு]

வான்வெளி அருங்காட்சியகம் இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் வரலாறு, போர் விமானத் தொழில்நுட்பம் உள்ளிட்ட இத்தியாதிகள் விளக்கப் படங்களாக ஓர் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [1]

மற்றொரு அறையில் விமானத்தின் சில மெருகூட்டப்பட்ட கூறுகள் வைக்கப்பட்டுள்ளன, முக்கியமாக சுகோய் சு 30, மிக்-21 மற்றும் மிக்-27. போன்ற வகை விமான்ங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. [2] 1963 முதல் ஒரு மிக் -21 விமானத்தின் ஓட்டுநர் தலைகவசம் உட்பட 1963 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிலிருந்த விமான சீருடைகள் போன்றவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மிக்-21

மேற்கோள்கள்[தொகு]

  1. Nasik :: (2008-11-19). "HAL Pragati Museum". Warbirds of India. மூல முகவரியிலிருந்து 2016-08-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-07-24.
  2. "Refurbished HAL museum to be open to public in a fortnight - Times of India". Timesofindia.indiatimes.com (2015-10-18). பார்த்த நாள் 2016-07-24.