பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)
பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | PSP(L) |
தலைவர் | சிவபால் சிங் யாதவ் |
நிறுவனர் | சிவபால் சிங் யாதவ் |
தொடக்கம் | 29 ஆகத்து 2018 |
முன்னர் | சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி |
தலைமையகம் | இலக்னோ, உத்தரப்பிரதேசம், இந்தியா |
கொள்கை | சமூகவுடைமை சமய சார்பின்மை முன்னேற்றம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல் |
நிறங்கள் | சிவப்பு மஞ்சள் பச்சை |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப்பிரதேசம் சட்டப் பேரவை) | 1 / 403 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
pragatisheelsamajwadiparty | |
இந்தியா அரசியல் |
பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) (Pragatisheel Samajwadi Party (Lohiya))(மொழிபெயர்ப்பு : முற்போக்கு சோசலிச கட்சி (லோஹியா)), என்பது முன்னர் சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி என உத்தரப் பிரதேசம் முன்னாள் அமைச்சர் சிவபால் சிங் யாதவ் தோற்றுவித்த கட்சி ஆகும். இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஆகஸ்ட் 29, 2018 அன்று விலகி இக்கட்சியினைத் தோற்றுவித்தார்.[1] சோசலிச விழுமியங்களைத் தக்கவைக்க பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியை (லோஹியா) உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.[2] உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான இலக்னோவில் முகாம் அலுவலகம் உள்ளது. கட்சியின் நிரந்தர அலுவலகம் லக்னோவின் கோமதி நகரில் அமைந்துள்ளது.[3][4][1]
தேர்தல் சின்னம்[தொகு]

கட்சிக்கு அதிகாரப்பூர்வமான தேர்தல் சின்னமாக "திறவுகோல்" 2019 தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டது. பின்னர், இது 2022 தேர்தலுக்கு முன்பு "நாற்காலி" என மாற்றப்பட்டது [5]
குறிப்பிடத்தக்க தலைவர்கள்[தொகு]
சிவபால் சிங் யாதவ் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை மற்றும் ஜல் சக்தி துறையின் முன்னாள் அமைச்சர், அரசு, உத்தரப்பிரதேசம்
ரகுராஜ் சிங் ஷக்யா - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சையதா ஷதாப் பாத்திமா - முன்னாள் அமைச்சர்
ஆதித்யா யாதவ் - தலைவர் UPPCF மற்றும் பொதுச் செயலாளர், முற்போக்கு சோசலிச கட்சி (லோஹியா)
கட்சி கொடி[தொகு]
சிவப்பு நிறம் சோசலிசத்தையும் மஞ்சள் நிறம் எதிர்பார்ப்பினையும் பச்சை நிறம் ஒருங்கிணைப்பு மற்றும் செழுமையினைக் குறிக்கின்றது.
இந்த வகையில், சமூகத்தில் சோசலிசத்துடன் பிணைப்பதன் மூலம் உடல் வளத்தை அடைவதற்கான எதிர்பார்ப்பைக் கொடி அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Shivpal Yadav launches party, says tried to hold SP together" (in en). 23 October 2018. https://www.hindustantimes.com/india-news/after-floating-outfit-shivpal-yadav-announces-new-political-party/story-kJUa5HNt3PXarKCN2MkDHP.html.
- ↑ "Shivpal Yadav floats new party- Pragatisheel Samajwadi Party (Lohia)" (in en-IN). இந்தியன் எக்சுபிரசு. 24 October 2018. https://indianexpress.com/article/cities/lucknow/shivpal-yadav-floats-new-party-pragatisheel-samajwadi-party-lohia-5415374/.
- ↑ "शिवपाल यादव ने मुलायम के कभी अखिलेश तो कभी अपने मंच पर मौजूद रहने पर ये दिया बयान- Amarujala". https://www.amarujala.com/photo-gallery/lucknow/rally-of-pragatishil-samajwadi-party-in-lucknow. பார்த்த நாள்: 25 December 2018.
- ↑ "His new outfit to take out rally today: Shivpal Yadav takes SP formula, men to try outwit Akhilesh Yadav" (in en-IN). இந்தியன் எக்சுபிரசு. 9 December 2018. https://indianexpress.com/article/india/shivpal-yadav-samajwadi-party-formula-men-to-try-outwit-akhilesh-yadav-5484972/. பார்த்த நாள்: 25 December 2018.
- ↑ "यूपी: शिवपाल सिंह यादव की पार्टी प्रसपा का नया चुनाव चिह्न 'स्टूल', चुनाव आयोग ने किया आवंटित" (in hi). https://www.amarujala.com/lucknow/election-commission-alloted-stool-symbol-to-pragatisheel-samajwadi-party.