உள்ளடக்கத்துக்குச் செல்

பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Fyodor Aleksandrovich Bredikhin.

பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின் (Fyodor Aleksandrovich Bredikhin) (உருசியம்: Фёдор Александрович Бредихин, 8 திசம்பர்r 1831 – 14 மே 1904 (O.S.: 1 மே)) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். பிரெதிகின், பிரெதிசின் எனவும் வழங்கும். அயல்மொழிகளில் பியோதோர் என்பது தியோடோர் என மாற்றி கூறப்படுகிறது.

வாழ்க்கைப்பணி[தொகு]

மாஸ்கோ பலகலைக்கழகத்தில் உள்ள வான்காணகத்தில் இவர் 1857 இல் பணியளராகச் சேர்ந்து, 1873இல் அதன் இயக்குநரானார்.[1] இவர் 1890 இல் புல்கோவ் வான்காணகத்தின் இயக்குநரானார். அங்கு 1894 வரை தொடர்ந்து பணியாற்றினார். அதே ஆண்டில் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆனார்.

இவர் வால்வெள்ளிகளின் வால்பற்றிய கோட்பாடு, விண்கற்கள், விண்கள் பொழிவுகள் ஆகியவை பற்றி ஆய்வு செய்தார்.

786 பிரெதிகினா எனும் சிறுகோளும் நிலாவில் இருக்கும் பிரெதிகின் (குழிப்பள்ளம்) எனும் குழிப்பள்ளமும் இவரது பெயரால் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.

வெளி இணைப்புகள்[தொகு]