பியோதர் தஸ்தயெவ்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பியோடர் தஸ்தயெவ்ஸ்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
Fyodor Dostoevsky

பிறப்பு {{{birthname}}}
அக்டோபர் 30, 1821(1821-10-30)
மாஸ்கோ, ரஷ்யப் பேரரசு
இறப்பு சனவரி 28, 1881 (அகவை 59)
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு
தொழில் புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
கர்மாசொவ் சகோதரர்கள்
குற்றமும் தண்டனையும்

ஃபியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி (Fyodor Mikhailovich Dostoevsky, ரஷ்ய மொழி: Фёдор Миха́йлович Достое́вский, உச்சரிப்பு: ஃபியோதர் மிக்கைலவிச் தஸ்தயெவ்ஸ்கி, இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க, நவம்பர் 11 [யூ.நா. அக்டோபர் 30] 1821பெப்ரவரி 9 [யூ.நா. ஜனவரி 28] 1881) ஒரு ரஷ்ய புதின எழுத்தாளரும், புனைகதை எழுத்தாளரும் ஆவார். குற்றமும் தண்டனையும் (Crime and Punishment), கராமாசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov) என்பன இவரது ஆக்கங்களில் முக்கியமானவை.

இவரது இலக்கியங்கள், 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யச் சமூகத்தில் குழப்பநிலையில் இருந்த அரசியல், சமூக, ஆன்மீகப் பின்னணியில் மனித உளவியலை ஆராய்கின்றன. பலர் இவரை 20 ஆம் நூற்றாண்டு இருப்பியல்வாதத்தின் நிறுவனர் அல்லது முன்னோடி எனக் கருதுகின்றனர். இவருடைய பாதாள உலகிலிருந்தான குறிப்புக்கள் (Notes from Underground) (1864) என்னும் ஆக்கம், முகமறியாத பாதாள உலக மனிதனிடமிருந்து வரும் கசப்புணர்வுடன் கூடிய குரலாக ஒலிக்கிறது. வால்ட்டர் கவுஃப்மன் என்பார் இவ்வாக்கத்தை, "இதுவரை எழுதப்பட்டவற்றுள் இருப்பியல்வாதத்தின் சிறப்பான அறிமுகம் என்றார்.

அவர் இயற்றிய "வெண்ணிற இரவுகள்" என்ற நாவல் இயற்கை என்ற தமிழ்த் திரைப்படமாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரின் கதைகளில் வெளிவந்த கதாப்பாத்திரமான அரசர் மிஷ்கின் என்ற பெயரைத் தன் புனைப் பெயராக ஏற்றுக்கொண்டார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மிஷ்கின்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dostoevsky's other Quixote.(influence of Miguel de Cervantes' Don Quixote on Fyodor Dostoevsky's The Idiot) Fambrough, Preston
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோதர்_தஸ்தயெவ்ஸ்கி&oldid=2080141" இருந்து மீள்விக்கப்பட்டது