பியூரோனசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூரோனசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-பிரிடின்கார்பாக்சிலிக் அமில [1-(2-பியுரேனைல்)எத்திலிடின்]ஐதரசைடு
வேறு பெயர்கள்
Furilazone; Clitizina; Menazone; FKI
இனங்காட்டிகள்
3460-67-1
ChemSpider 4655810
InChI
  • InChI=1S/C12H11N3O2/c1-9(11-3-2-8-17-11)14-15-12(16)10-4-6-13-7-5-10/h2-8H,1H3,(H,15,16)/b14-9-
    Key: GNDPAVKYAUIVEB-ZROIWOOFSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • C/C(=N/NC(=O)c1ccncc1)/c2ccco2
பண்புகள்
C12H11N3O2
வாய்ப்பாட்டு எடை 229.24 g·mol−1
தோற்றம் படிகங்கள்
உருகுநிலை 199 முதல் 201.5 °C (390.2 முதல் 394.7 °F; 472.1 முதல் 474.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பியூரோனசைடு (Furonazide) என்பது படிகத்தன்மையிலுள்ள நிலையான காசநோய் மருந்து ஆகும். இதன் உருகுநிலை 199-201.5 ° செல்சியசு வெப்பநிலையாகும்[1].

தயாரிப்பு[தொகு]

பியூரோனோசைடு முதன்முதலில் 1955 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஐசோனியாசிட்டு மற்றும் 2-அசிட்டைல்பியூரான் போன்றவற்றை எத்தமாலுடன் சேர்த்து தொடர்ந்து வடிகட்டுதல் மூலம் மியாடேக் என்பவர் இதை தயாரித்தார் [1][2].

பயன்பாடுகள்[தொகு]

பியூரோனசைடு ஒரு நிலையான பாக்டீரிய எதிர்ப்புச் செயலைக் காட்டுகிறது [1].10-8 மோலார் அளவுகளில் நிலையான காசநோய் எதிர்ப்பையும் காட்டுகிறது. காசநோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பு ஊசியான பேசில்லசு கால்மெட்டெ-குரூனினுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வுக்கூட சோதனைகள் தெரிவிக்கின்றன. இச்செயல்பாடுகளில் ஐசோனியாசிட்டுடன் ஒரு சமநிலை அடிப்படையில் அதற்குச் சமமானதாக இருக்கவேண்டும் என்றும் கருதப்படுகிறது [3].காசநோய் நுண்ணுயிர் எதிர்ப்பியான ஐசோனியாசிட்டு மருந்தைவிட சற்று அதிக தீவிரமாக இது செயல்படுகிறது என்று கினியா பன்றியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன [4]. மேலும் இம்மருந்து ஒப்பீட்டளவில் குறைந்த நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. சராசரி உயிர் கொல்லும் அளவு (எலி வாய்வழி) 2,600 மி.கி / கி.கி என அறிவிக்கப்பட்டுள்ளது [5].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Kazuo Miyatake, “Derivatives of isonicotinic acid hydrazide”, Japanese Patent 32,002,484 B4 (1957)
  2. Kazuo Miyatake; Ichimura, Shozo; Nagasaki, Senkichi; Hoji, Kazuhiko (1955). "Syntheses of compounds related to isonicotinic acid hydrazide. III. Antitubercular compounds". Yakugaku Zasshi 75: 1066–9. 
  3. Kiichiro Kakemi; Sezaki, Hitoshi; Iwamoto, Kikuo; Sano, Yukito (1969). "Stability of drugs in biological media. II. Relations between the stability in culture media and antibacterial activity of some isoniazid derivatives". Chemical & Pharmaceutical Bulletin 17 (8): 1623–8. doi:10.1248/cpb.17.1623. 
  4. Giovanni Pacilio; Pagnini, Pietro; Genazzani, Enrico (1964). "Tuberculostatic activity of some isoniazid derivatives administered to guinea pigs at different time intervals". Atti della Societa Italiana delle Scienze Veterinarie 18: 631–6. 
  5. "Drugs - Synonyms and Properties" data were obtained from Ashgate Publishing Co. (US)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூரோனசைடு&oldid=2640174" இலிருந்து மீள்விக்கப்பட்டது