பியூயிமோட்டோ-பெல்லியவ் வினை
Appearance
பியூயிமோட்டோ-பெல்லியவ் வினை (Fujimoto–Belleau reaction) ஈனால் லாக்டோன்களிலிருந்து வளைய α-பதிலீடு α,β-நிறைவுறா கீட்டோன்களை உருவாக்கும் ஒரு வேதி வினையாகும். சியார்ச்சு ஐ பியூயிமோட்டோ மற்றும் பெர்னார்டு பெல்லியவ் ஆகியோர் கண்டறிந்த காரணத்தால் இவ்வினைக்கு பியூயிமோட்டோ-பெல்லியவ் வினை என்று பெயர் சூட்டப்பட்டது.
இதுவொரு கிரிக்னார்டு வினையாகும். இவ்வினையைத் தொடர்ந்து ஓர் ஐதரசன்-நகர்வு, ஓர் ஈனால்-கீட்டோ இடமாற்றியம் மற்றும் ஓர் ஆல்டால் கூட்டு வினை போன்ற வினைகள் நிகழ்கின்றன. இறுதியாக கூறப்பட்டுள்ள ஆல்டால் வினை ஓரு நீக்கல் வினையாகும் (ஆல்டால் ஒடுக்கம்) E1CB எனப்படும் ஒற்றை மூலக்கூற்று இணைகார நீக்கம் என்ற வழிமுறையில் இவ்வினை நிகழ்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- George I. Fujimoto (1951). "Labeling of Steroids in the 4-Position". J. Am. Chem. Soc. 73 (4): 1856–1856. doi:10.1021/ja01148a518.
- Bernard Belleau (1951). "The Reaction of Methylmagnesium Iodide with β-(1-Hydroxy-3,4-dihydro-2-naphthyl)-butyric Acid Lactone". J. Am. Chem. Soc. 73 (11): 5441–5443. doi:10.1021/ja01155a504.
- Weill-Raynal, J. Synthesis 1969, 49.