உள்ளடக்கத்துக்குச் செல்

பியூட்டைல் நைட்ரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டைல் நைட்ரைட்டு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
1-நைட்ரசோ ஆக்சிபியூட்டேன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ? (UK) ? (அமெரிக்கா)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 544-16-1 Y
ATC குறியீடு None
பப்கெம் CID 10996
ChemSpider 10530 Y
UNII 44P8QG0F3T Y
வேதியியல் தரவு
வாய்பாடு C4

H9 Br{{{Br}}} N O2  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C4H9NO2/c1-2-3-4-7-5-6/h2-4H2,1H3 Y
    Key:JQJPBYFTQAANLE-UHFFFAOYSA-N Y
இயற்பியல் தரவு
கொதி நிலை 78.0 °C (172 °F)

பியூட்டைல் நைட்ரைட்டு (Butyl nitrite) என்பது C4H9NO2 என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். CH3(CH2)3ONO என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். இது என்-பியூட்டனாலில் இருந்து தயாரிக்கப்படும் ஓர் ஆல்கைல் நைட்ரைட்டு ஆகும். இரத்தக்குழாய் விரிவாக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது. 1-பியூட்டைல் நைட்ரைட்டு, என்-பியூட்டைல் நைட்ரைட்டு மற்றும் நைட்ரசு அமிலம் பியூட்டைல் எசுத்தர் ஆகியவை இச்சேர்மத்தைக் குறிக்கும் ஒத்த சொற்கள் ஆகும்.

தயாரிப்பு

[தொகு]

என்-பியூட்டனாலுடன் தளத்தில் தயாரிக்கப்படும் நைட்ரசு அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் பியூட்டைல் நைட்ரைட்டு உருவாகும்.[1]

பயன்கள்

[தொகு]

பரவசத்தைத் தூண்டும் உள்ளிழுக்கும் மருந்தாக பியூட்டைல் நைட்ரைட்டு இரத்தக்குழாய் விரிவாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. லாசு ஏஞ்சல்சு நகரத்தில் ஒரு பட்டதாரி மாணவரான கிளிஃபோர்ட் ஆசிங்கு என்பவரால் ஆல்கைல் நைட்ரைட்டின் வேகமாக செயல்படும் ஒத்த சேர்மமாக இது உருவாக்கப்பட்டது.[2][3] ரசு, லாக்கர் ரூம் மற்றும் போல்ட் ஆகியவை இந்த உள்ளிழுக்கும் மருந்தின் வணிகப் பெயர்களில் அடங்கும். தூய்மையாக்கி, நீரிய தூபம் அல்லது அறை நறுமணமூட்டி என்ற பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகிறது. இதன் பரவச விளைவுக்காகவும் உடலுறவின் போது மென்மையாக தசைகளை தளர்த்தவும் பயன்படுகிறது.[2][3]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "N-Butyl Nitrite". Organic Syntheses 16: 7. 1936. doi:10.15227/orgsyn.016.0007. 
  2. 2.0 2.1 Orlean SC (5 February 1980). "Doctors Say It Can Kill You, but Butyl Nitrite Is a Legal High in Portland". Willamette Week. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
  3. 3.0 3.1 Mack D (27 July 2021). "This Man Does Not Make Poppers". BuzzFeed News. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டைல்_நைட்ரைட்டு&oldid=4074527" இலிருந்து மீள்விக்கப்பட்டது