பியூட்டைல் அக்ரைலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டைல் அக்ரைலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பியூட்டைல் புரோப்-2-யீனோயேட்டு
இனங்காட்டிகள்
141-32-2
ChEBI CHEBI:3245
ChEMBL ChEMBL1546388
ChemSpider 8514
EC number 205-480-7
InChI
  • InChI=1S/C7H12O2/c1-3-5-6-9-7(8)4-2/h4H, 2-3,5-6H2,1H3
    Key: CQEYYJKEWSMYFG-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H12O2/c1-3-5-6-9-7(8)4-2/h4H, 2-3,5-6H2,1H3
    Key: CQEYYJKEWSMYFG-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C10921
பப்கெம் 8846
வே.ந.வி.ப எண் UD3150000
SMILES
  • CCCCOC(=O)C=C
UNII 705NM8U35V
UN number 2348
பண்புகள்
C7H12O2
வாய்ப்பாட்டு எடை 128.17 g·mol−1
தோற்றம் தெளிவான, நிறமற்ற நீர்மம்[1]
மணம் வன்மையான ,பழச்சுவை[1]
அடர்த்தி 0.89 கி/மி.லி (20°செ)[1]
உருகுநிலை −64 °C; −83 °F; 209 K [1]
கொதிநிலை 145 °C; 293 °F; 418 K [1]
0.1% (20°செ)[1]
கரைதிறன் எத்தனால், எத்தில் ஈதர், அசிட்டோன், கார்பன் டெட்ராகுளோரைடு (slight)
ஆவியமுக்கம் 4 மி.மீ.பாதரசம் (20°செ)[1]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R10-R36/37/38-R43
S-சொற்றொடர்கள் (S2)-S9
தீப்பற்றும் வெப்பநிலை 39 °C; 103 °F; 313 K [1]
Autoignition
temperature
267 °செ[2]
வெடிபொருள் வரம்புகள் 1.5% - 9.9%[1]
Lethal dose or concentration (LD, LC):
1800 மி.கி/கி.கி (தோல்,முயல்)[3]
1000 பகுதிகள்/மில்லியன் (4 மணி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 10 பகுதிகள்/மில்லியன் (55 மி.கி/மீ3)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பியூட்டைல் அக்ரைலேட்டு (Butyl acrylate) என்பது C7H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். வேதிப்பொருள்களை பெருமளவில் தயாரிப்பதில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

பயன்[தொகு]

வர்ணங்கள், மேற்பூச்சுகள், பூச்சுகள், பசைகள், எரிபொருள், ஜவுளி, நெகிழிகள் மற்றும் இடைவெளி நிரப்புகள் போன்றவற்றில் பியூட்டைல் அக்ரைலேட்டு பயன்படுத்தப்படுகிறது [4]

உயிர் வேதியியல்[தொகு]

சமீபத்திய மாதிரிகளில் பியூட்டைல் அக்ரைலேட்டு கார்பாக்சில் எசுத்தரேசினால் அல்லது குளுட்டாதையோனால் வளர்சிதைமாற்றமடைகிறது. அக்ரைலிக் அமிலம், பியூட்டனால், மெர்காப்டியூரிக் அமிலக் கழிவு (சிறுநீரில் வெளியேற்றப்படும் கழிவு மற்றும் கார்பனீராக்சைடு) ஆகியனவற்ரை இந்நச்சு நீக்க வினை உற்பத்தி செய்கிறது [5][6][7].

உற்பத்தி[தொகு]

அசிட்டைலின், 1-பியூட்டைல் ஆல்ககால், கார்பனோராக்சைடு, நிக்கல் கார்பனைல், ஐதரோகுளோரிக் அமிலம் போன்றவை பல்வாறாக வினைகளில் ஈடுபட்டு பியூட்டைல் அக்ரைலெட்டை உருவாக்குகின்றன. பியூட்டனால், மெத்தில் அக்ரைலேட்டு அல்லது அக்ரைலிக் அமிலத்துடன் வினைபுரிந்தும் பியூட்டைல் அக்ரைலேட்டை உருவாக்குகிறது [4]

பாதுகாப்பு[தொகு]

பெராக்சைடு அல்லது வெப்பத்தில் பியூட்டைல் அக்ரைலேட்டு உயர் வினைத்திறன் கொண்டும் எளிமையாக பலபடியாகும் தன்மையும் கொண்டுள்ளன. எனவே வணிகமுறை தயாரிப்புகளில் பலபடியாதல் வளர்தடுபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. வலிமையான காரங்கள், அமிலங்கள், அமீன்கள், ஆலசன்கள், ஐதரசன் சேர்மங்கள் மற்றும் ஆக்சிசனேற்றிகள் ஆகியனவற்றுடன் பியூட்டைல் அக்ரைலெட்டு எளிதாக வினைபுரிகிறது. மேலும், பியூட்டைல் அக்ரைலேட்டு ஒரு இரண்டாம்நிலை எரிதிரவமாக [1] வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஐதரோ குயினோன் அல்லது ஐதரோ குயினோன் எத்தில் ஈதர் ஆக பியூட்டைல் அக்ரைலேட்டு நிலைப்பு அடைகிறது[2].

சுவாசம். தோல் வழியாக விழுங்குதல், கண்களால் நோக்குதல் போன்ற செயல்களால் பியூட்டைல் அக்ரைலேட்டு மனித உடலுக்குள் ஈர்க்கப்படுகிறது. இதன் அறிகுறியாக கண்களில், தோலில் எரிச்சல்,சுவாசக் குழாய் கோளாறுகள், தோல் நோய்கள், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல் தொண்டை வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன [1][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0075". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "பியூட்டைல் அக்ரைலேட்டு". International Chemical Safety Cards. NIOSH. July 1, 2014.
  3. 3.0 3.1 3.2 "N-Butyl Acrylate". OSHA/NIOSH. September 28, 2011.
  4. 4.0 4.1 4.2 "Butyl Acrylate". PubChem. November 28, 2015.
  5. "Screening Information Data Set for n-Butyl acrylate, CAS #141-32-2". Organization for Economic Cooperation and Development. October 2002. Archived from the original on 2015-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-01-01.
  6. "Final report on the safety assessment of Acrylates Copolymer and 33 related cosmetic ingredients". Int. J. Toxicol. 21 Suppl 3: 1–50. 2002. doi:10.1080/10915810290169800. பப்மெட்:12537929. 
  7. "Monographs on the Evaluation of the Carcinogenic Risk of Chemicals to Humans". Geneva: World Health Organization: IARC. 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டைல்_அக்ரைலேட்டு&oldid=3587577" இலிருந்து மீள்விக்கப்பட்டது