பியூட்டைரால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பியூட்டைரால்டிகைடு[1]
Skeletal structure
Flat structure
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Butanal
இனங்காட்டிகள்
123-72-8 Yes check.svgY
ChEBI CHEBI:15743 Yes check.svgY
ChemSpider 256 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01412 Yes check.svgY
பப்கெம் 261
UNII H21352682A Yes check.svgY
பண்புகள்
C4H8O
வாய்ப்பாட்டு எடை 72.11 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் கார மணம், ஆல்டிகைடின் மணம்
அடர்த்தி 0.8016 கி/மி.லி
உருகுநிலை
கொதிநிலை 74.8 °C (166.6 °F; 347.9 K)
7.6 கி/100 மி.லி (20 °செ)
கரைதிறன் எத்தனால், ஈதர், தொலுயீன் ஆகியவற்றில் கலக்கும்
அசிட்டோன், பென்சீன் ஆகியவற்றில் நன்றாகக் கரையும்
குளோரோஃபார்மில் சிறிதளவு கரையும்.
மட. P 0.88
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3766
பிசுக்குமை 0.45 cP (20 °செ)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.72 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
2470.34 கியூ/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Sigma-Aldrich
ஈயூ வகைப்பாடு எளிதில் தீப்பிடிக்கும் (F)
R-சொற்றொடர்கள் R11
S-சொற்றொடர்கள் (S2), S9, S29, S33
தீப்பற்றும் வெப்பநிலை −7 °C (19 °F; 266 K)
Autoignition
temperature
230 °C (446 °F; 503 K)
வெடிபொருள் வரம்புகள் 1.9–12.5%
Lethal dose or concentration (LD, LC):
2490 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஆல்டிகைடு
தொடர்புடையவை
புரோப்பியனால்டிகைடு
பென்டனால்
தொடர்புடைய சேர்மங்கள் பியூட்டன்-1-ஓல்
பியூட்டரிக் அமிலம், சமபியூட்டைரால்டிகைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பியூட்டைரால்டிகைடு (Butyraldehyde) என்பது CH3(CH2)2CHO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டேனின் ஆல்டிகைடு வகை வழிப்பொருளான இச்சேர்மத்தை பியூட்டனால் என்றும் அழைப்பர். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பிடிக்கும் பியூட்டைரால்டிகைடு கார்ப்பு நெடியுடன் காணப்படுகிறது. பல கரிமக் கரைப்பான்களுடன் கலக்கும் இயல்புடையாகவும் உள்ளது.

தயாரிப்பு[தொகு]

புரோபைலீனை ஐதரோபார்மைலேற்றம் செய்வதால் பியூட்டைரால்டிகைடு தயாரிக்கலாம்.

CH3CH=CH2 + H2 + CO → CH3CH2CH2CHO

கோபால்ட் கார்பனைல் மற்றும் பின்னர் முப்பீனைல்பாசுப்பைனின் ரோடியம் அணைவுச் சேர்மங்கள் மரபுவழியாக பார்மைலேற்ற வினைகளுக்கு வினையூக்கியாகச் செயல்பட்டன. பின்னர் நீரில் கரையக்கூடிய ஈனிகளில் இருந்து தருவிக்கப்பட்ட ரோடியம் வினையூக்கிகள் ஆதிக்கம் செலுத்தின.ரோடியம் வினையூக்கியின் நீர்க்கரைசல் புரோப்பைலீனை ஆல்டிகைடாக மாற்றுகிறது. ஐதரோபார்மைலேற்ற வினையின் மூலம் ஆண்டொன்றுக்கு ஆறு பில்லியன் கிலோகிராம் பியூட்டைரால்டிகைடு உற்பத்தி செய்யப்படுகிறது.

n-பியூட்டனாலை வினையூக்க ஐதரசன் நீக்கம் செய்தும் பியூட்டைரால்டிகைடைத் தயாரிக்க முடியும். அசிட்டால்டிகைடில் இருந்து தருவிக்கப்பட்ட குரோட்டனால்டிகைடை வினையூக்க ஐதரசனேற்றம் செய்தும் ஒரு காலத்தில் பியூட்டைரால்டிகைடு தயாரிக்கப்பட்டது.[2]

காற்றில் படிப்படியாக பியூட்டைரால்டிகைடு ஆக்சிசனேற்றம் அடைந்து பியூட்டரிக் அமிலம் உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 1591
  2. Boy Cornils, Richard W. Fischer, Christian Kohlpaintner "Butanals" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2000, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_447

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டைரால்டிகைடு&oldid=1913058" இருந்து மீள்விக்கப்பட்டது