பியா கேளையாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியா கேளையாடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
முந்தியாகசு
இனம்:
மு. பியா கேளையாடு
இருசொற் பெயரீடு
முந்தியாகசு பியா
(தாமஸ் & தோரியா, 1889)

பியா கேளையாடு (Fea's muntjac) அல்லது தெனாசெரிம் கேளையாடு (முன்தியாகசு பியா) என்பது தெற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு அரிய மான் சிற்றினமாகும். இது பொதுவான கேளையாடு போன்றது. முதிர்ச்சியடைந்த கேளையாடு 18 முதல் 21 கிலோ (40-46 பவுண்டுகள்) எடையுடன் காணப்படும். இது பகல் நேரங்களில், தனிமையாக, மேட்டுநில பசுமையான, கலப்பு அல்லது புதர் காடுகளில் (2500 மீட்டர் 8200அடி) உயரத்தில், புற்கள், குறைந்த வளரும் இலைகள் மற்றும் மென்மையான தளிர்கள் கொண்ட உணவாக உண்ணும். குட்டிகள் பொதுவாக அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் ஈனப்படும், தாயுடன் பயணிக்கும் வரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.[2][3]

இது விலங்கியல் நிபுணர் இலியோனார்டோ பியா என்பவரின் நினைவாக அழைக்கப்படுகிறது. இதன் மற்றொரு பெயர் மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு இடையில் உள்ள தெனாசெரிம் மலைகளிலிருந்து வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Timmins, R.; Steinmetz, R.; Chutipong, W. (2016). "Muntiacus feae". IUCN Red List of Threatened Species 2016: e.T13927A22160266. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T13927A22160266.en. https://www.iucnredlist.org/species/13927/22160266. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Barrette, C. 1977. Fighting behavior of muntjac and the evolution of antlers. Evolution, 31(1): 169-176.
  3. Weigl, R. 2005. Longevity of Mammals in Captivity; from the Living Collections of the World. Stuttgart, Germany: Kleine Senckenberg-Reihe 48. Accessed February 24, 2006 at http://genomics.senescence.info/species/biblio.php?id=0671.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியா_கேளையாடு&oldid=3922238" இலிருந்து மீள்விக்கப்பட்டது