உள்ளடக்கத்துக்குச் செல்

பியார்ன் போர்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஆர்ன் ரூனே போர்டி (பிறப்பு 6 யூன் 1956) சுவீடன் நாட்டுக்காரரான இவர் முன்னால் உலக முதல் தர டென்னிசு வீரர் ஆவார். பலரால் டென்னிசு உலகின் சிறந்த ஆட்டக்காரராக கருதப்படுகிறார். ஓப்பன் காலத்தில் 1974-81 வரை ஆறு பிரெஞ்சு ஓப்பன் கோப்பைகளையும் ஐந்து விம்பிள்டன் கோப்பைகளையும் ஆக மொத்தம் 11 தனிநபர் கிராண்ட் சிலாம் கோப்பைகளையும் மூன்று ஆண்டு இறுதியில் நடக்கும் கோப்பைகளையும் 15 கிராண்ட் பிரிக்சு தொடர் கோப்பைகளையும் பெற்றார்.

இளவயது மக்களின் கவர்ச்சிக்குரியவராக தன் டென்னிசு வாழ்க்கையை தொடங்கிய பிஆரன் யாரும் எதிர்பாராத புகழை அடைந்தார். தொடர்ச்சியான வெற்றிகள் 1970 ஆம் ஆண்டு காலத்தில் அவரின் புகழை டென்னிசு உலகில் அதிகமாக்கின. இதன் விளைவாக அவர் விளம்பரதாரர்களால் மிகவும் விரும்பப்படுபவராக மாறிவிட்டார். 1979ஆம் ஆண்டு ஓர் மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒரே பருவகாலத்தில் பரிசு பணம் பெற்ற முதல் வீரர் என அறியப்படுகிறார். விளம்பரங்கள் மூலமும் பல மில்லியன் டாலர் வருமானம் பெற்றார். பெரும்புகழ் அடைந்ததன் விளைவாக தொடர்ச்சியான கவனமும் அதனால் தேவையற்ற அழுத்தமும் பெற்றதால் இவரின் உடல் பாதிக்கப்பட்டது அதனால் 26 வயதாக உள்ளபோதே ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.

இளவயது வாழ்க்கை[தொகு]

பியார்ன் போர்டி இச்சாட்கோம் நகரத்தில் ரூனேவுக்கும் மாகரிதா போர்டிக்கும் 6 யூன் 1956 அன்று பிறந்தார்[1]. பெற்றோர்களின் ஒரே குழந்தையான இவரின் வளர்ப்பு முழுவதும் இச்சாடகோம் நகருக்கு அருகிலுல்ல சர்வடாலியா நகரில் ஆகும். இவரது தந்தை [[மேசைப்பந்தாட்டம்]|மேசைப்பந்தாட்ட]] போட்டி ஒன்றில் தங்க டென்னிசு மட்டையை பரிசாக பெற்றிருந்தார் அது குழந்தையாக இருந்த இவரது கவனத்தை ஈர்த்தது. டென்னிசு மட்டையை இவருக்கு கொடுத்து இவரது டென்னிசு வாழ்க்கையை இவரது தந்தை தொடக்கிவைத்தார்.

சிறந்த தடகள தன்மையும் ஆற்றலும் உடைய இவரின் தோற்றமும் ஆடும் முறையும் தனித்துவமானவை. இவரின் வலிமை முன்கையால் சக்திவாய்ந்த சுழல் அடியை இரு கைகளிலும் அடிக்க உதவுகிறது. மேஏலும் இரு கைகளையும் இணைத்து மடக்கு கை பாணியை பயன்படுத்தவும் உதவுகிறது. இவர் இச்சிம்மி கான்னர்சின் மடக்கு கை பாணியை பின்பற்றினார். பதிமூன்று வயதாக இருந்த போது சுவீடனின் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் சிறந்தவரையும் டேவிசுக் கோப்பை தலைவர் லென்னார்டு பிர்கெலினையும் தோற்கடித்தார். லென்னார்டு பின் இவருக்கு டென்னிசு வாழ்வு முழுவதும் முதன்மை பயிற்சியாளராக இருந்தார். இவர் போர்டியின் பாணியை மாற்ற முயலவேண்டாம் என மற்றவர்களை எச்சரித்தார்.[2]

திருமண வாழ்க்கை[தொகு]

ரோமானியாவின் டென்னிசு வீராங்கனை மாரியனா சிமிஓன்சு என்பவரை 24 யூலை 1980இல் புக்கரெச்டில் திருமணம் புரிந்தார். 1984இல் இத் திருமணம் முறிந்தது. சூவீடன் பாணி அழகி சென்னிகே பீஅர்ன் மூலம் குழந்தைக்கு தந்தையானார். பின் இத்தாலிய பாடகி லோரெடனா பீஅர்னை 1989இல் திருமணம் புரிந்தார். 1993இல் இத் திருமணம் முறிந்தது. 8 யூன் 2002ல் மூன்றாவது முறையாக பட்ரீசியா ஒசுட்டல்ட் என்பவரை திருமணம் புரிந்தார் இவர்களுக்கு 2003இல் லியோ என்ற மகன் பிறந்தார். இவரே தற்போது சுவீடனில் 14 வயதுக்குட்பட்டோரின் முதல் நிலை வீரர்.

டென்னிசு வாழ்க்கை[தொகு]

1972-73[தொகு]

15 வயதுடைய போர்டி சூவிடனின் டேவிசுக் கோப்பைக்காக 1972இல் ஆடினார். தன்னுடைய அறிமுக ஆட்டத்தில் நியூசிலாந்து வீரரை தோற்கடித்தார். பின்பு அவ்வாண்டிலேயே இளையோருக்கான விம்பிள்டன் கோப்பையை பெற்றார். 1973இல் தொழில்முறை ஆட்டக்காரராக களம் இறங்கி மான்டே கார்லோ ஓப்பனின் இறுதி சுற்று வரை வந்து இலியானா சாச்டாவிடம் தோற்றார்.[3] தர வரிசையில் இடம் பெறாத இவர் பிரெஞ்சு ஓப்பனில் நான்காவது சுற்று வரை முன்னேறி தர வரிசையில் எட்டாவது உள்ள அட்டிரியனோ பனாட்டாவிடம் தோற்றார். போர்டி முதன்முதல் 1973இல் விம்பிள்டன் கோப்பைக்கு விளையாடிய போது அதில் அவரின் தர வரிசை ஆறு ஆகும், டென்னிசு விளையாட்டாளர் அமைப்பு விம்பிள்டனை புறக்கணித்தாதல் இது சாத்தியமாயிற்று. அதில் அவர் கால் இறுதி வரை முன்னேறினார் கால் இறுதியில்ஐந்து தொகுப்புகள் வரை கடுமையாக போராடி ரோசர் தெலரிடம் தோற்றார்[4]

1974 முதல் ஓய்வு வரை[தொகு]

17 வயதாக இருந்த போது ஆத்திரேலிய ஓப்பனில் போட்டியிட்டு மூன்றாவது சுற்றில் பில் டெண்ட்டிடம் தோற்றார், பில்லே ஆத்திரேலிய ஓப்பனை வென்றார். பின்பு சனவரியில் நியூசிலாந்து ஓப்பனை வென்றார் இதுவே இவரின் முதல் தனிநபர் கோப்பையாகும்.[5] 1974இல் முதனமுறையாக பிரெஞ்சு ஓப்பனை பதினெட்டு வயதாக இருந்த போது வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.theguardian.com/sport/2005/jun/05/tennis.features1
  2. "Björn Borg är bäst av dem alla". DN.SE. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
  3. John Barrett, ed. (1974). World of Tennis '74. London: Queen Anne Press. pp. 330, 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780362001686.
  4. John Barrett, ed. (1974). World of Tennis '74. London: Queen Anne. pp. 15–17, 30–32, 45–47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0362001686.
  5. "Sports Whirl". The Virgin Islands Daily News. AP: p. 23. 17 January 1974. https://news.google.com/newspapers?id=NA5OAAAAIBAJ&sjid=9K0DAAAAIBAJ&pg=6488%2C1746137. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியார்ன்_போர்டி&oldid=3861856" இலிருந்து மீள்விக்கப்பட்டது