பியரி சந்த் மித்ரா
பியரி சந்த் மித்ரா (Peary Chand Mitra) ( ஜூலை 22, 1814 - நவம்பர் 23, 1883) ஒரு இந்திய எழுத்தாளர், பத்திரிகையாளர், கலாச்சார ஆர்வலர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.[1] இவரது புனைப் பெயர் தேக்சந்த் தாக்கூர் ஆகும். அவர் ஹென்றி டெரோசியோவின் இளம் வங்கக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அவர் எளிய வங்காள உரைநடை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வங்காள மறுமலர்ச்சியில் முன்னணி பங்கு வகித்தார். இவரது அலேலர் கரேர் துலால் வங்காள மொழி நாவலுக்கு பங்கிம் சந்திர சாட்டர்ஜி மற்றும் பலர் எடுத்த பாரம்பரியத்திற்கு முன்னோடியாக விளங்கினார். மித்ரா 1883 நவம்பர் 23 அன்று கொல்கத்தாவில் காலமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மித்ரா 1814 ஜூலை 22 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவரது தந்தை, ராம்நாராயண் மித்ரா, ஆரம்பகால வாழ்க்கையில் ஹூக்லி மாவட்டத்தின் பானிசேலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தார். மற்றும் ஐரோப்பிய வணிகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பனியர்களாக [2] தனது செல்வத்தை சம்பாதித்தார்.[1] அன்றைய வழக்கப்படி, அவர் இளம் வயதிலேயே பாரசீக மொழியைக் கற்கத் தொடங்கினார். மேலும் 1827 ஆம் ஆண்டில் இந்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். ஒரு மாணவராக இருந்தபோது, அவர் கற்றுக்கொண்டதை தனது வட்டாரத்தில் மற்றவர்களுக்கு கற்பிக்க தனது சொந்த வீட்டில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். சில சமயங்களில் அவரது நண்பர்களான ரசிக் கிருஷ்ணா மல்லிக், ராதநாத் சிக்தார் மற்றும் சிப் சந்திர தேப் ஆகியோர் அவருடன் சேர்ந்து அவரது முயற்சிகளை அதிகரித்தனர். டேவிட் ஹரே மற்றும் டெரோசியோவும் அவருக்கு உதவினார்கள்.
தொழில்
[தொகு]மித்ரா 1836 இல் கொல்கத்தா பொது நூலகத்தில் துணை நூலகராக சேர்ந்தார். எஸ்ப்ளேனேடில் ஸ்ட்ராங் என்ற ஆங்கிலேயரின் இல்லத்தில் அதே ஆண்டு நூலகம் நிறுவப்பட்டது. இது பின்னர் ஃபோர்ட் வில்லியம் கல்லூரிக்கு மாற்றப்பட்டது, சார்லஸ் மெட்கால்பின் நினைவாக மரியாதை செலுத்துவதற்காக மெட்காஃப் ஹால் கட்டப்பட்டபோது, நூலகம் 1844 இல் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு, மித்ரா விரைவாக ஏணியில் ஏறி புத்தகங்களை எடுத்துத் தரும் நூலகர், செயலாளர் மற்றும் இறுதியாக நூலகத்தின் மேற்பார்வையாளர், போன்ற பதவிகளை ஓய்வு பெறும் வரை அவர் வகித்தார்.
அவர் தனது ஒவ்வொரு நாளையும், பல்வேறு சமூக நல நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் கொல்கத்தா பல்கலைக்கழக செனட், விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சமூகம் மற்றும் பெத்துன் சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். அவர் பிரித்தானிய இந்திய சமூகத்தின் (பின்னர் சங்கம்) செயலாளராக இருந்தார். மேலும், அவர் சமாதான நீதிபதியாகவும் இருந்தார் .
நாட்டின் விவசாய வளர்ச்சியில் அவருக்கு ஆர்வம் இருந்தது. நிரந்தர தீர்வு, தி ஜெமிந்தர் மற்றும் ரியோட்ஸ் பற்றிய அவரது விமர்சனம் ஒரு பரபரப்பை உருவாக்கியது. வேளாண் சங்கத்தில் உறுப்பினராக இருந்தபோது, விவசாயம் குறித்த புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து வங்காளத்திற்கு மொழிபெயர்ப்பதற்கான ஒரு அமைப்பைத் தொடங்கினார். 1881 ஆம் ஆண்டில், மேடம் பிளேவட்ஸ்கி மற்றும் கர்னல் ஓல்காட் ஆகியோர் இந்தியாவுக்குச் சென்றபோது, அவர் பிரம்மஞான சபையுடன் தொடர்பு கொண்டார்.
பத்திரிகை மற்றும் இலக்கியப் பணி
[தொகு]மித்ரா குறிப்பாக பத்திரிகை மற்றும் வங்காள இலக்கிய வளர்ச்சியில் தனது பங்களிப்புக்காக அறியப்படுகிறார். இங்கிலீசுமேன், இந்தியன் ஃபீல்ட், இந்து பேட்ரியாட், ஃப்ரெண்ட் ஆப் இந்தியா, கொல்கத்தா ரெவ்யூ, பெங்கால் ஹர்கரா மற்றும் பெங்கால் ஸ்பெக்டேட்டர் போன்ற பத்திரிகைகளுக்கு, வழக்கமான பங்களிப்பாளராக இருந்தார். அவரது தெரோஜியன் நண்பர் ரசிக் கிருஷ்ணா மல்லிக்குடன் இணைந்து, அவர் ஞானேசுவான் பத்திரிகையைத் திருத்தியுள்ளார். மற்றொரு தெரோஜியன், ராம் கோபால் கோஷ், அதனுடன் தொடர்புடையவர் ஆவார்.
குடும்பம்
[தொகு]மித்ராவின் சகோதரர் கிஷோரி சந்த் மித்ரா, ஒரு அரசு ஊழியராக இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர் – அமிர்த லால் மித்ரா, சூனி லால் மித்ரா, ஹீரா லால் மித்ரா மற்றும் நாகேந்திர லால் மித்ரா மற்றும் ஒரு மகள் உமா சஷி மித்ரா ஆவர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Islam, Sirajul (2012). "Mitra, Peary Chand". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Banians are local brokers and agents to the European merchants in the eighteenth and nineteenth centuries