பிம்லா புதி
| பிம்லா புதி | |
|---|---|
| பிறப்பு | 19 செப்டம்பர் 1933 |
| இறப்பு | 24 பெப்ரவரி 2024 (அகவை 90) |
| குடியுரிமை | இந்தியர் |
| தேசியம் | இந்தியர் |
| துறை | இயற்பியல், அயனிமம் |
| பணியிடங்கள் | இந்திய தேசிய அறிவியல் கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | தில்லி பல்கலைக்கழகம் சிகாகோ பல்கலைக்கழகம் |
| ஆய்வேடு | அயனிமம் அலைவுகள் மற்றும் இரண்டு-நீரோடை உறுதியற்ற தன்மை மீதான சார்பியல் விளைவுகள் (1962) |
| ஆய்வு நெறியாளர் | சுப்ரமணியன் சந்திரசேகர் |
| அறியப்படுவது | இயற்பியலாளர் |
பிம்லா புதி (Bimla Buti) அயனிமம் (இயற்பியல்) துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய இயற்பியலாளர் ஆவார். அவர் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் (ஐஎன்எஸ்எ) முதல் இந்திய பெண் இயற்பியலாளர் ஆவார்.
பிறப்பு
[தொகு]பிம்லா புதி 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் நாள் பிறந்தார்.
கல்வி
[தொகு]பிம்லா புதி தில்லி பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல், முதுநிலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார். பின்னர் முனைவர் பட்டப் படிப்பிற்காக அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கே இவர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். 1962-இல் அயனிமம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]
தொழில்
[தொகு]முனைவர் பட்டம் பெற்ற பிறகு, புதி இந்தியா திரும்பினார். பின்பு தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.[1] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் அமெரிக்காவில் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரிய சென்றார். 1968-ஆம் ஆண்டில் புதி, மீண்டும் இந்தியா திரும்பி, தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். அப்போதைய இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (பிஆர்எல்) இயக்குநரான, விக்கிரம் சாராபாய் புதியை பிஆர்எல்-இல் சேர அழைத்தார். இங்கு புதி 1970 முதல் 1993 வரை இணைப் பேராசிரியர், பேராசிரியர், மூத்த பேராசிரியர், புலத்தலைவராகப் பணியாற்றினார்.[1]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]புதி, தனது தொழில் வாழ்க்கையில் பல விருதுகளைப் பெற்றார்.[1] பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தும் அறிவியல், இயற்பியல் தொடர்பான விருதுகள் பெற்றுள்ளார். குறிப்பாக இவர்:
- இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் உறுப்பினர்[2] விருது மற்றும்
- 1994. இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் வைணு பாப்பு நினைவு விருது
இறப்பு
[தொகு]புதி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 24, அன்று தனது 90-ஆவது வயதில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Buti, Bimla (31 October 2008). "A woman scientist in a field dominated by men". Lilavati's Daughters: The Women Scientists of India. http://www.ias.ac.in/womeninscience/LD_essays/63-66.
- ↑ "Indian Fellow". Indian National Science Academy. 2016. Archived from the original on 12 August 2016. Retrieved 13 May 2016.
- ↑ "International Astronomical Union | IAU". www.iau.org. Retrieved 8 March 2024.