உள்ளடக்கத்துக்குச் செல்

பிபிபூர் மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிபிபூர் மாதிரி
நாடுஇந்தியா
துவக்கம்2016
நிறுவனர்சுனில் ஜல்கான்
நோக்கம்பெண்கள் மேம்பாடு
முழுப்பெயர்பிபிபூர் மாதிரி பெண்கள் அதிகாரமளித்தல், கிராம மேம்பாட்டுத் திட்டம்

பிபிபூர் மாதிரி பெண்கள் அதிகாரமளித்தல், கிராம மேம்பாட்டுத் திட்டம், பொதுவாக பிபிபூர் மாதிரி (Bibipur Model) என்று அழைக்கப்படுகிறது. இது பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதையும் கிராமப்புற இந்தியாவில் பெண்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.

இத்திட்டம் 2016ஆம் ஆண்டு பிபிபூர் கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச் சுனில் ஜக்லானால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2017ஆம் ஆண்டு முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் அரியானா முழுவதும் 100 கிராமங்களில் செயல்படுத்த ஏற்றுக்கொள்ளப்பட்டபோது தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது.[1][2]

பின்னணி

[தொகு]

கிராமப்புற இந்தியாவில் நிலவும் பாலினப் பாகுபாடு, சமூக சார்புகளுக்கு விடையிருப்பாக பிபிபூர் மாதிரி உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியானது, சமூக ஈடுபாடு, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல்வேறு உத்திகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[3][4]

செயல்பாடு

[தொகு]

பெண்கள் அதிகாரமளித்தல்

முடிவெடுப்பதிலும் நிர்வாகத்திலும் பங்கேற்க ஊக்குவிப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த மாதிரியின் நோக்கமாகும்.[5]

கிராம மேம்பாடு

பெண் சிசுக்கொலை, கல்வி, சுகாதாரம்,சொத்துரிமைகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் கிராமங்களை மேம்படுத்துவதும் இந்த மாதிரியின் நோக்கமாகும்.[5]

பாலின பாகுபாட்டை எதிர்த்துப் போராடுதல்

கூட்டங்களில் கலந்து கொள்ளவும், தங்கள் கவலைகளைப் பற்றிப் பேசவும் பெண்களை ஊக்குவிப்பதன் மூலம் பாலினச் சார்புகளை எதிர்த்துப் போராடுவதே இந்த மாதிரியின் நோக்கமாகும்.[5]

பெண்களுக்கு எதிரான மோசமான வார்த்தைகளைத் தடை செய்தல்

கிராம சபையில் வெளிப்படையான விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான தவறான அவதூறுகளைத் தடை செய்வதை இந்த மாதிரி நோக்கமாகக் கொண்டுள்ளது.[5]

செயல்படுத்தல்

[தொகு]
  • 2017ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அரியானாவில் 100 கிராமங்களைத் தத்தெடுத்து, அந்தக் கிராமங்களில் பிபிபூர் மாதிரியைச் செயல்படுத்த ஜக்லானிடம் கேட்டார்.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bajwa, Harpreet (2023-03-03). "Daughters spell magic: Haryana man on mission to empower women". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
  2. "200 साल में पहली बार चढ़ीं चौपाल पर". Navbharat Times (in இந்தி). Retrieved 2025-01-14.
  3. Dsouza, Krystelle (2024-09-20). "His Daughter's Birth Turned Him Into a Feminist: Sunil Jaglan's Fight Against Female Foeticide". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
  4. "Sunil Jaglan: Champion of Gender Equality in Rural India" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2025-01-16.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Haryana: Bibipur model of women empowerment to be introduced in 100 villages adopted by President". The Indian Express (in ஆங்கிலம்). 2017-05-23. Retrieved 2025-01-13.
  6. Khan, Ayesha. "Unwanted daughters: Fighting female foeticide in India". FairPlanet (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
  7. Jaglan, Sunil. ""Congratulations! It's a girl!" How one crusader helped change attitudes toward daughters in an Indian state". South Asia Monitor (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபிபூர்_மாதிரி&oldid=4286921" இலிருந்து மீள்விக்கப்பட்டது