பிபின் சந்திரன்
பிபின் சந்திரன் Bipin Chandran | |
|---|---|
| பிறப்பு | பொன்குன்னம், கோட்டயம் , கேரளா, இந்தியா |
| மற்ற பெயர்கள் | பிந்திரன் |
| கல்வி | செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரி, சங்கனாச்சேரி, மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம் |
| பணி | ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2009-தற்போது வரை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | 1983 மற்றும் பாவட |
| விருதுகள் | சிறந்த திரைப்படக் கட்டுரைகளுக்கான கேரள மாநில திரைப்பட விருது |
பிபின் சந்திரன் (Bipin Chandran) கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். டாடி கூல் என்ற இவரது முதல் படம் 2009 இல் வெளியானது.
சொந்த வாழ்க்கை
[தொகு]பிபின் சந்திரன் இந்தியாவின் கேரளாவின் பொன்குன்னத்தில் பிறந்தார்.[1] சங்கனாச்சேரி செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, சிறந்த இயக்குநருக்கான கேரள மாநில திரைப்பட விருது வென்ற மார்ட்டின் பிராக்கட்டைச் சந்தித்தார். பிபின் முதுகலை படிப்புக்காக எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பயின்றார்.[1]
தொழில் வாழ்க்கை
[தொகு]ஒரு எழுத்தாளரான பிபின் [2] மம்மூட்டியை ஒரு நடிகராக, நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளாக குறிக்கும் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பான மம்மூமுட்டி கழ்ச்சாயம் வயநாயும் என்ற புத்தகத்தை எழுதினார்.[3] சமீபத்தில் மலையாளத் திரைப்படங்களின் வழிபாட்டு உரையாடல்களைப் பற்றி விவாதிக்கும் ஓர்மாயுண்டோ ஈ முகம் என்ற தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.[4] ஐராட்டாச்சங்கு இவரது மற்றொரு புத்தகமாகும்.[5]
ம்திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதும் பிபின், கோமாளி மேல்கை நெடுன்ன காலம் மற்றும் மடம்பில்லியில் மனோரோகி ஆகிய இரண்டு கட்டுரைகளுக்காக சிறந்த திரைப்படக் கட்டுரைகளுக்கான 2019 கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sathyendran, Nita (2016-02-04). "Playing on words". https://www.thehindu.com/features/friday-review/scenarist-bipin-chandran-is-on-a-roll/article8188199.ece.
- ↑ "Bipin Chandran, Author at Indian Express Malayalam". Indian Express Malayalam (in மலையாளம்). Archived from the original on 20 August 2021. Retrieved 2021-08-20.
- ↑ CHANDRAN, BIPIN (2014-01-01). MAMMOOTTY : KAZHCHAYUM VAYANAYUM. ASIN 8126414464.
- ↑ CHANDRAN, BIPIN (2017-01-01). ORMMAYUNDO EE MUKHAM. ASIN 8126476583.
- ↑ Irattachangu. Archived from the original on 14 October 2021. Retrieved 20 August 2021.
- ↑ "Bipin Chandran full of gratitude for Samakalika Malayalam Vaarika" இம் மூலத்தில் இருந்து 20 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210820144805/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2020/oct/14/bipin-chandran-full-of-gratitude-for-samakalika-malayalam-vaarika-2209905.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிபின் சந்திரன்
- "ഈ പുസ്തകവീട്ടിലേക്കാണ് 2019ലെ ഒരു സംസ്ഥാന ചലച്ചിത്ര പുരസ്കാരമെത്തിയത് - Bipin Chandran - Interview". YouTube (in ஆங்கிலம்). 2 November 2020. Retrieved 2021-08-20.
- "All you want to know about BipinChandran". FilmiBeat (in ஆங்கிலம்). Retrieved 2021-08-20.