பின்னோக்கிய தையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்னோக்கிய தையல் (Back stitch) தையல் வகைகளில் ஒன்று. எளிமையான முறையாகவும் கைத்தையல் பூவேலைப்பாடுகளில் ஓரங்களை சுலபமாக அமைக்கவும் பயன்படுகிறது.

பயன்பாட்டு வகை[தொகு]

  • இரு துணிகளை இணைக்கும் போது பயன்படுகிறது.
  • மற்ற நிரப்பு வகைத் தையல்களான பெருக்கல் தையல் (Cross Stitch) போன்ற தைப்புகளின் ஓரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அமைக்கும் முறை[தொகு]

  • பெரும்பாலும் வலமிருந்து இடமாகச் செய்யப்படுகிறது.
  • ’இரண்டடி முன்னெடுத்து, ஓரடி பின்வைக்கும்’ முறையாக இதன் அமைப்பு முறை உள்ளது.
பின்னோக்கிய தையலின் விளக்கப்படம்
  • படத்தில், எண் வரிசை நூல் கோக்கப்பட்ட ஊசி செல்ல வேண்டிய வரிசை முறையைக் குறிக்கிறது. முதலாம் எண்ணில் துணியின் அடியிலிருந்து மேலே ஊசி எடுக்கப்பட்டு, வலதாக எண் இரண்டு வழியே துணிக்கு கீழே ஊசி செலுத்தப்பட்டு, எண் மூன்று வழியே மேலே எடுக்கப்பட வேண்டும். எண் ஒன்றுக்கு மிக அருகிலுள்ள எண் நான்கு வழியாக கீழே ஊசி செல்லவேண்டும். இவ்வாறு துணியின் வலதிலிருந்து இடது புறமாகத் தைக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னோக்கிய_தையல்&oldid=2238183" இருந்து மீள்விக்கப்பட்டது