பின்னேயசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பின்னேயசு
Penaeus monodon.jpg
பின்னேயசு மோனோடான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
துணைத்தொகுதி: கிறஸ்டேசியா
வகுப்பு: மலக்கோஸ்டிரக்கா
வரிசை: பத்துக்காலிகள்
துணைவரிசை: டெண்டிரோபிராங்கியேட்டா
பெருங்குடும்பம்: பின்னேயிடே
குடும்பம்: பின்னேயிடே
பேரினம்: பின்னேயசு
பேபரிசியசு, 1798
சிற்றினம்

பின்னேயசு (Penaeus) என்பது உப்பு நீரில் வளரும் இறால் வகைகளுள் ஓர் பேரினமாகும். இந்த பேரினத்தில் பெரும் புலி இறால் (பி. மோனோடான்) சிற்றினமும் உள்ளது. இது உலகளவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஓட்டுடைய காலிகளில் ஒன்றாகும். பெரெஸ் ஃபார்பான்ட் மற்றும் கென்ஸ்லி ஆகியோர் இந்த பேரினத்தின் கீழ் உள்ள சிற்றினங்களை உருவ வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டும், குறிப்பாக விலங்குகளின் பிறப்புறுப்பு பண்புகளைக் கொண்டும் பேரினத்தினை அமைத்தனர்[1]. ஆனால் இந்த திருத்தம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[2] இத்திருத்தத்தினைத் தொடர்ந்து, பின்னேசு பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் மறு ஒதுக்கீடு செய்து பின்னேயிடே குடும்பமாக அமைத்து அதன் கீழ் பார்பேண்டிபின்னேயசு, பென்னிரோபின்னேயசு, லிப்டோபின்னேசு, மார்சுபின்னேயசு பேரினங்கள் கொண்டுவரப்பட்டன.[1] கீழ்க்கண்ட அட்டவணையில் பல்வேறு சிற்றினங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பழைய அறிவியல் பெயர் புதிய அறிவியல் பெயர் பொதுவான பெயர் (கள்)
பி. அஸ்டெக்கஸ் ஃபர்ஃபான்டெபீனியஸ் அஸ்டெக்கஸ் வடக்கு பழுப்பு இறால்
பி. பிரேசிலியன்சிஸ் ஃபர்ஃபான்டெபீனியஸ் பிரேசிலியன்சிஸ் சிவப்பு புள்ளிகள் இறால், புள்ளியிடப்பட்ட இளஞ்சிவப்பு இறால்
பி. ப்ரெவிரோஸ்ட்ரிஸ் ஃபர்ஃபான்டெபீனியஸ் ப்ரீவிரோஸ்ட்ரிஸ் படிக இறால், இளஞ்சிவப்பு இறால்
பி. கலிஃபோர்னென்சிஸ் ஃபர்ஃபான்டெபீனியஸ் கலிஃபோர்னென்சிஸ் மஞ்சள் நிற இறால், பழுப்பு இறால்
பி. சினென்சிஸ் ஃபென்னெரோபீனியஸ் சினென்சிஸ் சதைப்பற்றுள்ள இறால், சீன வெள்ளை இறால், ஓரியண்டல் இறால்
பி. ஓரியண்டலிஸ்
பி. டூரரம் ஃபர்பான்டெபீனியஸ் டூரரம் வடக்கு இளஞ்சிவப்பு இறால்
பி. எசுலெண்டஸ் பின்னேயசு எசுலெண்டஸ் பழுப்பு புலி இறால்
பி பின்னேயசு ஹதோர்
பி. இண்டிகஸ் ஃபென்னெரோபீனியஸ் இன்டிகஸ் இந்திய இறால்
பி. ஜபோனிகஸ் மார்சுபீனியஸ் ஜபோனிகஸ் குருமா இறால், குருமா இறால், ஜப்பானிய புலி இறால்
பி. மெர்குயென்சிஸ் ஃபென்னெரோபீனியஸ் மெர்குயென்சிஸ் வாழை இறால், வாழை இறால்
பி. மோனோடன் பின்னேயசு மோனோடான் மாபெரும் புலி இறால், கருப்பு புலி இறால்
பி. நோட்டலிஸ் ஃபர்ஃபான்டெபீனியஸ் நோட்டலிஸ் தெற்கு இளஞ்சிவப்பு இறால்
பி. ஆக்சிடெண்டலிஸ் லிட்டோபீனியஸ் ஆக்சிடெண்டலிஸ் மேற்கு வெள்ளை இறால்
பி. பாலென்சிஸ் ஃபர்ஃபான்டெபீனியஸ் பாலென்சிஸ் சாவோ பாலோ இறால், கார்பாஸ் இறால்
பி. பென்சிலட்டஸ் ஃபென்னெரோபீனியஸ் பென்சிலட்டஸ் இறால் இறக்கு
பி. ஷ்மிட்டி லிட்டோபீனியஸ் ஷ்மிட்டி தெற்கு வெள்ளை இறால்
பி. செமிசுல்கடஸ் பின்னேயசு செமிசுல்கேடஸ் பச்சை புலி இறால்
பி. செடிஃபெரஸ் லிட்டோபீனியஸ் செடிஃபெரஸ் வடக்கு வெள்ளை இறால்
பி.சிலாசி ஃபென்னெரோபீனியஸ் சிலாசி
பி. ஸ்டைலிரோஸ்ட்ரிஸ் லிட்டோபீனியஸ் ஸ்டைலிரோஸ்ட்ரிஸ் மேற்கு நீல இறால், நீல இறால்
பி. சப்டிலிஸ் ஃபர்ஃபான்டெபீனியஸ் சப்டிலிஸ் தெற்கு பழுப்பு இறால்
பி. வன்னமீய் லிட்டோபீனியஸ் வன்னமீய் வைட்லெக் இறால், பசிபிக் வெள்ளை இறால், கிங் இறால்

மேலும் சில சிற்றினங்கள் சில நேரங்களில் பின்னேயசு சிற்றினங்களாக அழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை மெலிசெர்டசு பேரினத்தின் கீழ் வருகின்றன:[நம்பகமற்றது ]

தவறான பெயர் சரியான பெயர் பொதுப்பெயர்
பி. கேனாலிகுலேட்டசு மெலிசெர்டசு கேனாலிகுலேட்டசு சூனிய இறால், புலி இறால்
பி. கெரத்துரசு[3] மெலிசெர்டசு கெரத்துரசு கேரமோட் இறால்,மூன்று வரிப்பள்ள இறால்
பி. லேட்டிசல்கேட்டசு மெலிசெர்டசு லேட்டிசல்கேட்டசு மேற்கு இராச இறால்
பி. லாங்கிஸ்டைலசு மெலிசெர்டசு லாங்கிஸ்டைலசு சிவப்பு புள்ளி இராச இறால், சிவப்பு புள்ளி இறால்
பி. மார்ஜினேட்டசு மெலிசெர்டசு மார்ஜினேட்டசு அலோகா இறால்
பி. பிலெபிஜசு மெலிசெர்டசு பிலெபிஜசு கிழக்கு இராச இறால்[நம்பகமற்றது ]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Isabel Pérez Farfante; Brian Frederick Kensley (1997). Penaeoid and Sergestoid Shrimps and Prawns of the World: Keys and Diagnoses for the Families and Genera. Mémoires du Muséum national d'histoire naturelle. 175. Muséum national d'histoire naturelle. பக். 1–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782856535103. 
  2. Patsy A. McLaughlin; Rafael Lemaitre; Frank D. Ferrari; Darryl L. Felder; R. T. Bauer (2008). "Letter to the Editor: A reply to T. W. Flegel" (PDF). Aquaculture 275: 370–373. doi:10.1016/j.aquaculture.2007.12.020. http://si-pddr.si.edu/jspui/bitstream/10088/7506/1/IZ_Lemaitre_et_al_2008_Letter_to_the_Editor.pdf. 
  3. Penaeus kerathurus , FAO.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Penaeidae Rafinesque, 1815" . ஒருங்கிணைந்த வகைபிரித்தல் தகவல் அமைப்பு .
  • இனங்கள் பட்டியல் (in சப்பானிய மொழி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னேயசு&oldid=3046455" இருந்து மீள்விக்கப்பட்டது