பின்னல் கவசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜப்பானிய பின்னல் கவசம்

பின்னல் கவசம் (ஆங்கிலம்: Lamellar armour, லேமெல்லார் ஆர்மர்) என்பது இரும்பு, பதனிட்ட தோல், அல்லது வெண்கலத்தாலான சிறு செவ்வக தகடுகளை வரிசையாக பின்னி உருவான ஒரு முற்கால உடற்கவசம் ஆகும். பின்னல் கவசம் வெவ்வேறு வகைகளாக கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதும் பயன்படுத்தப்பட்டன.

பின்னல் கவசம், மூன்று முற்கால கவசங்களுள் ஒன்றாகும், மற்றவை செதில் கவசம் மற்றும் அடுக்குக் கவசம் ஆகும். 

விளக்கம்[தொகு]

பின்னல் கவசம், "லாமெள்ளே" என்றழைக்கப்படும் துளையிடப்பட்ட சிறிய தட்டுகளை வரிசையாக சேர்த்துக் கட்டி செய்யப்பட்டது.

எவ்வாறு பின்னால் கவசம் பின்னப்பட்டது என்பதற்கு ஓர் உதாரணம்.

செதில் கவசத்தைப்போல் துணியை பின்புலமாக, பின்னல் கவம் கொண்டிருக்காது. ரோமானியர்கள் இவ்வகை கவசத்தை லோரிக்கா புளுமாட்டா என்றழைப்பர்.

பின்னல் கவசம் பூண்ட கோர்யாக் மக்கள்.

ஜப்பானிய பின்னல் கவசம் [தொகு]

கோசேன் எனப்படும் சிறிய தட்டுக்களால் ஆனா ஜப்பானிய பின்னல் கவசத்தின் நெருக்கப் பார்வை.

ஜப்பானிய பின்னல் கவசம் இரு வகைப்படும், குறுகலான தட்டுகளால் ஆன ஹோன் கோசேன், மற்றும் அகலமான தட்டுகளால் ஆன ஹோன் ஐயோசென்

See also[தொகு]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னல்_கவசம்&oldid=2276455" இலிருந்து மீள்விக்கப்பட்டது