பின்னலூர் இராமலிங்கேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:பின்னலூர், சிதம்பரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:புவனகிரி
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:இராமலிங்கேசுவரர்
தாயார்:பர்வதவர்த்தினி
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பின்னலூர் இராமலிங்கேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் பின்னலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] கோயிலின் தல மரமாக பின்னைமரம் உள்ளது.

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயில் இறைவன் இராமரால் பூசை செய்யப்பட்டவர் எனவே இராமேஸ்வரத்திற்கு இணையான தலம் என்று கருதப்படுகிறது.

கோயில் அமைப்பு[தொகு]

இவ்வூரின் முகப்பிலேயே இக்கோயில் உள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலின் எதிரில் அழகிய சதுர வடிவிலான பெரிய குளம் உள்ளது. கோயில் கருவறையில் கிழக்கு நோக்கி இராமலிங்கேஸ்வரர் நடுத்தர அளவிலான சுயம்புலிங்கமாக அமைந்துள்ளார். தெற்கு நோக்கிய இறைவி பர்வதவர்த்தினி சன்னதி உள்ளது. இரு கருவறைகளையும் ஒரு முகப்பு மண்டபம் இணைக்கிறது. இறைவியின் கருவறை ஒட்டி வில்வமரம், வன்னி மரம் ஆகியவை உள்ளன. இக்கோயிலின் தரையில் இருந்து பிரஸ்தரம் எனப்படும் மேல்மட்டம் வரை கருங்கலால் கப்பட்டப்பதாக உள்ளது. கோயிலின் வாயில் எதிரில் சிறிய நந்தியும் பலிபீடமும் உள்ளன. வாயில் இருபுறம் சிறுமாடங்களில் விநாயகரும், தண்டபாணி கோலத்திலான முருகனும் உள்ளனர். இக்கோயிலில் கொடிமரமில்லை அதற்கான பீடம் மட்டும் உள்ளது. இவ்வாலயத்தில் ஞான காரனாக சனி பகவான் தனி சன்னதியாக அருள்பாலிக்கின்றார்.

பிரகாரத்தை வலம் வரும்போது மடைப்பள்ளிக்கு அருகில் 100 அடிக்கும் மேல் ஆழமான அக்னி தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாது நிலையில் இருக்கும். இதற்கு அருகில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், சேக்கிழார் என ஐவரக்கும் சிலைகள் அமைக்கபட்டுள்ளன. இவ் ஆலயத்தின் பிரகாரத்தின் பின்புறம் விநாயகர் சிறிய சன்னதி கொண்டுள்ளார். அருகில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சன்னதி உள்ளது. அதனை ஒட்டினாற்போல் கிழக்கு நோக்கிய முருகன் தன் இரு துணைவியாருடன் இருக்கும் சிற்றாலயம் அமைந்துள்ளது.

சண்டேசர் இறைவனை நோக்கியபடி தியானத்தில் அமர்ந்துள்ளார். கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை ஆஞ்சநேயர் என கோட்ட தெய்வங்கள் உள்ளனர். தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதியும் அதன் அருகில் பள்ளியறையும் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய ஒரு மண்டபத்தில் பைரவர் அருகில் சிவசூரியன் எனும் பெயரில் சூரியபகவானும், அருகில் சந்திரனும், அருகில் இரு நாகர் சிலைகள் உள்ளன. நவகிரகங்கள் சிறிய மண்டபத்தில் உள்ளனர். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

மாடவிலகம்[தொகு]

இக்கோயிலின் வெளிப்புறத்தில் நான்கு வீதிகளிலும் மடவிளாகம் என்று சொல்லப்படுகின்ற கோவில்கள் உள்ளன. அக்னி மூலையில் விநாயகப்பெருமான் திருக்கோவிலும், தெற்கு மடவிளாகத்தில் பூர்ண புஷ்கலை சமேத ஹரிஹர புத்திரர் ஆலயமும் அதன் அருகில் பால முருகன் ஆலயமும் அமைந்துள்ளன. ஈசானிய மூலையில் கிராமத்தின் எல்லை தெய்வமாக செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)