உள்ளடக்கத்துக்குச் செல்

பின்காலனித்துவத் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்காலனித்துவத் திறனாய்வு என்பது பின்காலனித்துவக் கோட்பாடுகளின் அடிப்படையிலான திறனாய்வு ஆகும். இது, "பண்பாட்டு ஆய்வு" என்பதனுள் அடங்குவது. பெரும்பாலும் ஐரோப்பியக் காலனி ஆதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நாடுகளையும், பண்பாடுகளையும் சேர்ந்த இலக்கியங்களை இது ஆராய்கிறது. காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்கள் தொடர்பில் காலனி ஆதிக்க நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகள் எழுதிய ஆக்கங்களையும் இந்த ஆய்வு உள்ளடக்கும்.

அதிகாரம், பொருளாதாரம், அரசியல், சமயம், பண்பாடு என்பவை தொடர்பான பிரச்சினைகளையும், இவை எவ்வாறு காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் தொழிற்படுகின்றன என்பது குறித்தும் பின்காலனித்துவத் திறனாய்வின் கீழ் ஆய்வு செய்யப்படுகிறது. மேல் நாட்டு இலக்கியங்களும், மேல் நாட்டு வரலாறுகளும் அறிவை உருவாக்கும் முதன்மைச் சாதனங்களாகக் கருதப்படுவதைப் பின்காலனித்துவத் திறனாய்வு கேள்விக்கு உள்ளாக்குகிறது. முதலாம் உலகம், இரண்டாம் உலகம், மூன்றாம் உலகம், நான்காம் உலகம் போன்ற சொற் பயன்பாடுகள் மேலை நாடுகளின் முதன்மை இடத்தை வலுவூட்டிக் கொள்வதற்கானவை என இது விமர்சிக்கிறது.

குறிப்புக்கள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]