பினோதானந்த் ஜா
பினோதானந்த் ஜா | |
---|---|
3வது பீகார் முதலமைச்சர் | |
பதவியில் 18 பிப்ரவரி 1961 – 2 அக்டோபர் 1963 | |
முன்னவர் | தீப் நாராயண் சிங் |
பின்வந்தவர் | கிருஷ்ணா பல்லாப் சாகே |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1971-1972 | |
முன்னவர் | சத்ய நாராயண சின்கா |
பின்வந்தவர் | இலலித் நாராயண் மிசுரா |
தொகுதி | தர்பங்கா, பீகார் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1901 ஏப்ரல் 17, 1901 தேவ்கர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்று- சார்க்கண்டு, இந்தியா) |
இறப்பு | 1971 (வயது 70-71) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பண்டிதர் பினோதானந்த் ஜா என்று அழைக்கப்படும் பினோதானந்த் ஜா (Binodanand Jha)(17 ஏப்ரல் 1900 - 1971) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்பொழுது சார்கண்டில் உள்ள பைத்யநாத்தாம் தியோகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மத்திய கொல்கத்தா கல்லூரியில் (இப்போது மௌலானா ஆசாத் கல்லூரி) கல்வி பயின்றார். பிப்ரவரி 1961 முதல் அக்டோபர் 1963 வரை பீகார் முதல்வராக இருந்தார். இவர் 1971-ல் பீகாரின் தர்பங்கா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான 5வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1948-ல் பீகாரின் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார்.[1][2]
இளமை[தொகு]
ஜா, (காங். ) பீகார்-தர்பங்கா-1971, மறைந்த ஸ்ரீ சச்சிதா நந்த் ஜாவின் மகன் ஆவார். இவர் 1900ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி சந்தால் பர்கானா மாவட்டத்தில் உள்ள தியோகர் என்ற இடத்தில் பிறந்தார். கொல்கத்தா மத்திய கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் 1932-ல் பிரமிளா ஜாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இவர் விவசாய குடும்பத்தினைச் சார்ந்தவர். சமூக சேவைகளிலும் ஈடுபட்டவர்.
வகித்தப் பதவிகள்[தொகு]
- உறுப்பினர்
- (i) தியோகர் நகராட்சி, 1924-27
- (ii) பயணிகள் குழுவின் இடங்கள், 1925-28
- (iii) 1936 மற்றும் 1946 முதல் பீகார் சட்டமன்றம்
- நாடாளுமன்ற செயலாளர், பீகார், 1936-38
- 1946-ல் உள்ளாட்சி சுயாட்சி, மருத்துவம், தொழிலாளர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்
- உறுப்பினர், அரசியல் நிர்ணய சபை, 1948
சமூக சேவை[தொகு]
காங்கிரசு, சர்க்கா சங்கம் மற்றும் காதி ஆணையம் ஆகியவற்றின் கீழ் கிராமோத்யோக் நூற்பாளர் நலனுக்காக நிறுவனங்களை நடத்துதல்.
பொழுதுபோக்கு. - செய்தித்தாள் துணுக்குகள்.
பிடித்த பொழுது போக்கு மற்றும் பொழுதுபோக்கு. - புத்தக வாசிப்பு மற்றும் யோகா.
சிறப்பு ஆர்வங்கள்[தொகு]
பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஊராட்சி தொடர்பான பிரச்சனைகள்.
வெளியீடுகள்[தொகு]
1928-ல் சந்தால் பர்கானாவில் பன்னிரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்கள்[தொகு]
பிரான்சு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "States of India since 1947". World Statesman. 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Law Kumar Mishra (22 March 2013). "First Bihar assembly: Down memory lane". The Times of India. 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.