உள்ளடக்கத்துக்குச் செல்

பினோசிட்டோசிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல உறிஞ்சுதல்

கல உயிரியலில் பினோசிட்டோசிசு (pinocytosis) அல்லது பாய்ம உயிரணு உட்கவர்தல் (fluid endocytosis, bulk-phase pinocytosis) என்பது கலப்புறப் பாய்மம் வழி அயல் பொருளை கலப்பபடலத்தைத் துளைத்து உள்ளுறிஞ்சும் நிகழ்வாகும். பின்னோசைட்டோசிசு என்ற சொல்லை எச். டபிள்யு. லூயிசு 1931-இல் அறிமுகப்படுத்தினார்.[1] இம்முறையில் கலம் கலப்புறப் பாய்மத்தை கலக்கணிகப் படலத்தின் உள்குழிவு மடிப்பு வழியாக உள்ளிழுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட பாய்மம் கலக்கவர்தல் குமிழாக மாறுகிறது. பினலிக்குமிழ் இலைசோசோம்களுடன் சேர்ந்து வினைபுரிந்து உணவுத்துகள்களை விதைக்கிறது. இவ்வினை நடைபெற அடினோசின் முப்பாசுவேற்று உதவுகிறது. அடினோசின் முப்பாசுவேற்று (ATP) அனைத்து உயிரினங்களுக்கும் ஆற்றலைத் தருகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rieger, R.; Michaelis, A.; Green, M.M. 1991. Glossary of Genetics. Classical and Molecular (Fifth edition). Springer-Verlag, Berlin, [1].
  2. Guo, Lily. "Pinocytosis - What Is It, How It Occurs, and More". Osmosis from Elsevier. Elsevier. Retrieved 25 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினோசிட்டோசிசு&oldid=4342109" இலிருந்து மீள்விக்கப்பட்டது