பினா சகீன் சித்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீனா சகீன் சித்திக் (Bina Shaheen Siddiqui) என்பவர் பாக்கித்தானிய வேதியியலாளர் மற்றும் கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள எச். ஈ. ஜி. வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.[1] சித்திக் கராச்சி பல்கலைக்கழகத்தில் 1978-ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.[2] 1980-ல், இதே பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

பாக்கித்தானின் உள்நாட்டுத் தாவரங்களின் இரசாயன கூறுகளில் நிபுணத்துவம் பெற்றவர்.[3] இவர் 1989-ல் உலக அறிவியல் அகாதமிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] மேலும் 1997-ல் பாக்கித்தான் அறிவியல் அகாதமியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]பாக்கித்தானின் வேதியியல் சமூகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[5]

விருதுகள்[தொகு]

  • வேதியியலில் முனைவர் அப்துஸ் சலாம் பரிசு (1986)
  • நிஷான்-இ-அஸ்மத்-இ-இல்ம் பிளேக், கராச்சி பல்கலைக்கழகம் (1989)
  • நிஷான்-இ-அஸ்மத்-இ-டானிஷ் பிளேக், கராச்சி பல்கலைக்கழகம் (1993)
  • நிஷானே- டேனிஷ் பிளேக், கராச்சி பல்கலைக்கழகம் (1998)
  • தேசிய புத்தக அறக்கட்டளையின் முதல் பரிசு (1997)
  • ஸ்டார் கேர்ள்ஸ் அண்ட் வுமன்ஸ் அறக்கட்டளையின் நட்சத்திர மகளிர் ஆண்டு விருது மற்றும் தங்கப் பதக்கம் (1997)
  • தம்கா-இ-இம்தியாசு, பாக்கித்தான் அரசு (2000)
  • ஈரான் இசுலாமிய குடியரசின் ஜனாதிபதியின் குவாரிசுமி விருது (2001)
  • அரசாங்கத்தால் சிதாரா-இ-இம்தியாசு பாக்கித்தானின் (2004)
  • புகழ்பெற்ற தேசிய பேராசிரியர்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "ISESCO Women in Science Chair at QAU". isesco.qau.edu.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
  2. "Bina Shaheen Siddiqui | Longdom Publishing SL". www.longdom.org. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  3. "Distinguished National Professor Bina Siddiqui". World Science Forum. Archived from the original on 2021-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  4. "Siddiqui, Bina Shaheen | TWAS". 2021-10-12. Archived from the original on 2021-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  5. "Chemical Society of Pakistan Fellows" (PDF). Archived from the original (PDF) on 20 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினா_சகீன்_சித்திக்&oldid=3690132" இலிருந்து மீள்விக்கப்பட்டது