உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு முன்னணி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாங்கு முன்னணி கட்சி
Penang Front Party
சுருக்கக்குறிPFP
தலைவர்ரசாலி முகமது சைன்
ஆலோசகர்பேட்ரிக் ஓய் கார் கியாப்
பொதுச் செயலாளர்லீ போ காங்
குறிக்கோளுரைபினாங்கு மக்களுக்கான பினாங்கு
தொடக்கம்6 செப்டம்பர் 2016
தலைமையகம்பிறை (பினாங்கு)
கொள்கைபிராந்தியவாதம்
நிறங்கள்சிவப்பு, நீலம், மஞ்சள்
மலேசிய மேலவை:
0 / 70
மலேசிய மக்களவை:
0 / 222
மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள்:
0 / 587
கட்சிக்கொடி
இணையதளம்
முகநூலில் பினாங்கு முன்னணி கட்சி

பினாங்கு முன்னணி கட்சி அல்லது இளைஞர் முன்னணி கட்சி (ஆங்கிலம்: Penang Front Party அல்லது Youth Front Party (PFP); மலாய்: Parti Barisan Pulau Pinang; சீனம்: 青年黨) என்பது மலேசியாவில் பினாங்கு மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஓர் எதிர்க்கட்சியாகும்.[1][2] இந்தக் கட்சி முதலில் 2016-ஆம் ஆண்டு அம்னோ (UMNO) சட்டமன்ற உறுப்பினரான சாகிதி சைனுல் ஆபிதீன் (Zahidi Zainul Abidin) என்பவரை ஆலோசகராகக் கொண்டு நிறுவப்பட்டது; மேலும் சில மாதங்களுக்குப் பிறகு பேட்ரிக் ஓய் என்பவரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.[3]

2018 மலேசிய பொதுத் தேர்தலின் போது அப்போதைய எதிர்க்கட்சியாக பினாங்கு மாநிலத்தில் பல இடங்களில் போட்டியிட்டது. அதே வேளையில் கோலாலம்பூருக்கும் ஒரு வேட்பாளரை அனுப்பியது.[4] இருப்பினும், அந்தக் கட்சி அதன் முதல் தேர்தல் முயற்சியிலேயே தோல்வியடைந்தது; வேட்பாளர்கள் அனைவரும் வைப்புத்தொகையை இழந்தனர்.

சூன் 2022-இல், 15-ஆவது மலேசியப் பொதுத் தேர்தலில் பினாங்கு மற்றும் கெடாவில் 10 மாநில தொகுதிகள்; மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட பினாங்கு முன்னணி கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கட்சித் தலைவர் அறிவித்தார்.[5] இருப்பினும், மலேசிய தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, 2022 மலேசியப் பொதுத் தேர்தலில் பினாங்கு முன்னணி கட்சி போட்டியிடவில்லை.

மலேசியப் பொதுத் தேர்தல் 2022

[தொகு]

புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதியில், மலேசியப் பொதுத் தேர்தலில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, சுயேச்சையாக ரசாலி முகமது சைன் போட்டியிட்டார். அவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணி சார்ந்த ஜனநாயக செயல் கட்சியின் (DAP) சியர்லீனா அப்துல் ரசீத் (Syerleena Abdul Rashid) என்பவரிடம் 49,054 சிறுபான்மை வாக்குகளில் தோல்வி அடைந்தார். ரசாலி முகமது சைன் 299 வாக்குகளை மட்டுமே பெற்றார். இது மொத்த வாக்குகளில் 0.48% ஆகும்.

அக்டோபர் 2022-இல், மனித கடத்தல் எதிர்ப்பு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு முன்னாள் அரசியல்வாதியை மலேசியக் காவல்துறை கைது செய்ததாக ஓர் உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.[6][7] திசம்பர் 17, 2022 அன்று, கட்சியின் தலைவர் பேட்ரிக் ஓய் கார் கியாப் மீது ஆட்கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தண்டத்தொகை விதிக்கப்படலாம் என்று ஓர் உள்ளூர் செய்தி நிறுவனம் மேலும் ஒரு செய்தியை வெளியிட்டது.

பதவி துறப்பு

[தொகு]

திசம்பர் 22, 2022 அன்று, பேட்ரிக் ஓய் கார் கியாப் தன் கட்சித் தலைவர் பதவியைத் துறப்பு செய்து, 32 வயதான தொழிலதிபர் ரசாலி முகமது சைனிடம் தலைவர் பதவியை ஒப்படைத்தார். பின்னர் ஓய் கட்சியின் ஆலோசகரானார்.[8]

அதே காலக்கட்டத்தில், பிரதமர் அன்வர் இப்ராகீம் அவர்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்த புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் 10,000 இளைஞர்களை ஒன்று திரட்டப் போவதாகவும் பேட்ரிக் ஓய் கார் கியாப் அறிவித்தார். ஆனாலும் அவரின் கட்சி எந்த ஓர் அரசியல் கூட்டணியிலும் இணையாது என்பதையும் வலியுறுத்தினார்.[9]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Penang-based PFP rebranding, pledges support for Anwar". 22 December 2022.
  2. Siti Sofia Md Nasir (19 April 2018). "Penang Front Party enters GE14 ring with young, multiracial candidates [NSTTV]". New Straits Times. Retrieved 25 April 2018.
  3. Lee Hooi Boon (18 May 2017). "Penang Front Party revived with appointment of Patrick Ooi as advisor". The Sun. Retrieved 25 April 2018.
  4. "Penang Front Party". singapore-elections.com. Archived from the original on 23 September 2018. Retrieved 8 May 2018.
  5. "General Election 15 [Malaymail]".
  6. "Politician assist in investigation under ATIPSOM [OrientalDaily]". 31 October 2022.
  7. "evidence found by Polis [OrientalDaily]". YouTube.
  8. "PFP dijenamakan semula, Razalif dilantik Presiden baharu". Utusan Malaysia (in மலாய்). 22 December 2022. Retrieved 25 December 2022.
  9. "重塑品牌与法庭案无关 黄家业转任前进党顾问". China Press. 22 December 2022. Retrieved 25 December 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு_முன்னணி_கட்சி&oldid=4448991" இலிருந்து மீள்விக்கப்பட்டது