பினாங்கு பிரித்தானிய முடியாட்சி
பினாங்கு பிரித்தானிய முடியாட்சி Crown Colony of Penang Jajahan Mahkota Pulau Pinang | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1946–1957 | |||||||||||||
| நாட்டுப்பண்: பிரித்தானிய நாட்டுப்பண் (1946–1952) இறைவன் அரசியைக் காப்பாற்றுவாராக. (1952–1957) | |||||||||||||
பினாங்கு அமைவிடம் | |||||||||||||
| நிலை | குடியேற்ற முடியாட்சி | ||||||||||||
| தலைநகரம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு 05°24′52″N 100°19′45″E / 5.41444°N 100.32917°E | ||||||||||||
| பேசப்படும் மொழிகள் | |||||||||||||
| அரசாங்கம் | குடியேற்ற அலுவலகம் | ||||||||||||
| முடியுரிமை | |||||||||||||
• 1946–1952 | ஆறாம் ஜோர்ஜ் | ||||||||||||
• 1952–1957 | இரண்டாம் எலிசபெத் | ||||||||||||
| பிரித்தானிய முதல்வர் | |||||||||||||
• 1946–1948 | சிட்னி நோயல் கிங் | ||||||||||||
| வரலாற்று சகாப்தம் | போருக்கு முந்தைய · பனிப்போர் | ||||||||||||
• நீரிணை குடியேற்றங்களின் கலைப்பு | 1 ஏப்பிரல் 1946 | ||||||||||||
• ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை | 31 ஆகத்து 1957 | ||||||||||||
| நாணயம் | மலாயா டாலர் | ||||||||||||
| |||||||||||||
| தற்போதைய பகுதிகள் | மலேசியா | ||||||||||||
பினாங்கு பிரித்தானிய முடியாட்சி (ஆங்கிலம்: Crown Colony of Penang; மலாய்: Jajahan Mahkota Pulau Pinang) என்பது 1946-ஆம் ஆண்டில் இருந்து 1957-ஆம் ஆண்டு வரையில் பினாங்கு மாநிலம், பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் இருந்ததைக் குறிப்பிடுவதாகும். 1786-ஆம் ஆண்டு கெடா சுல்தானகத்தால் விட்டுக் கொடுக்கப்பட்ட பிறகு, பினாங்கு தீவு பிரித்தானிய இறையாண்மையின் கீழ் வந்தது.
பினாங்கு தீவு, 1826-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரையில் நீரிணை குடியேற்றங்களின் ஒரு பகுதியாக இருந்தது.[1] பின்னர் சிங்கப்பூருடன் இணைக்கப்பட்ட இந்த பினாங்கு பிரித்தானிய முடியாட்சி, இலண்டனில் இருந்த பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தின் (Colonial Office) நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முடியாட்சி குடியேற்றப் பகுதியாக (Crown colony) மாறியது. பின்னர் இந்த முடியாட்சி மலாயன் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது.[2]
வரலாறு
[தொகு]1786-ஆம் ஆண்டு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், பினாங்கு தீவைக் கைப்பற்றி அங்கே ஒரு வணிக நிலையத்தை நிறுவியது.[3] சயாமிய மற்றும் பர்மிய அண்டை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக கெடாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கெடா சுல்தானால் பினாங்கு தீவு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[4] பின்னர் அது ஒரு முடியாட்சி குடியேற்றப் பகுதியாக மாற்றப்பட்டது.
1867-ஆம் ஆண்டு நீரிணை குடியேற்றங்கள் எனும் நிர்வாகக் கூட்டமைப்பின் மூலமாக பினாங்கு தீவு; பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.[3] பின்னர் 1942-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை, இரண்டாம் உலகப் போரின் காலக்கட்டத்தில் அந்தத் தீவு சப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
மலாயா கூட்டமைப்பு
[தொகு]இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நீரிணை குடியேற்றங்கள் கூட்டு நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டது. பினாங்கு, மலாக்கா இரு குடியேற்றப் பகுதிகளும் மலாயா கூட்டமைப்பில் முடியாட்சி குடியேற்றப் பகுதிகளாக மாற்றம் கண்டன. அதே வேளையில் சிங்கப்பூர் மட்டும் மலாயாவிலிருந்து பிரிந்து தனி ஒரு பிரித்தானிய முடியாட்சி குடியேற்றப் பகுதியாகத் (Standalone Crown Colony) தடம் கண்டது.[5]
1955-ஆம் ஆண்டில், பினாங்கில் பிரித்தானிய ஆட்சி முடிவிற்கு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த துங்கு அப்துல் ரகுமான் பிரித்தானியர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதுவே பினாங்கு நிர்வாகத்தை மலாயா ஒன்றியத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்பாக அமைந்தது. பின்னர் காலத்தில் மலாயா ஒன்றியம் என்பது மலாயா கூட்டமைப்பு என மாற்றம் கண்டது.
1957 ஆகத்து 31-ஆம் தேதி, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து மலாயா விடுதலை பெற்றபோது, பினாங்குத் தீவு மலாயா கூட்டமைப்பில் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. இந்த மலாயா கூட்டமைப்பு பின்னர் மலேசியா என விரிவாக்கம் கண்டது. பினாங்கு மற்றும் பிரித்தானிய போர்னியோவில் இருந்த சபா, சரவாக், பிரித்தானிய குடியேற்றங்களும் மலேசிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A. GUTHRIE (of the Straits Settlements, and OTHERS.) (1861). The British Possessions in the Straits of Malacca. [An Address to the Secretary of State for the Colonies, Signed by A. Guthrie and Others, and Dated April 20th, 1861, in Reference to the Transfer of the Administration of the British Possessions in the Straits of Malacca to the Colonial Office.]. p. 1.
- ↑ Ooi, Keat Gin (2004). Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor. Santa Barbara, CA: ABC-CLIO. p. 1049. ISBN 1576077705.
- ↑ 3.0 3.1 Kratoska, Paul H. (2001). South East Asia, Colonial History: Imperial decline: nationalism and the Japanese challenge (1920s-1940s), Volume 4. London: Taylor & Francis. p. 89. ISBN 0415215439.
- ↑ Graham, Penny F. (2015-03-01). Whatever Remains: A true story of secret lives and hidden families (in ஆங்கிலம்). Big Sky Publishing. ISBN 9781925275032.
- ↑ "The Straits Settlements is Dissolved". National Library Board, Singapore. 1 April 1946. Retrieved 16 July 2016.
மேலும் காண்க
[தொகு]- பினாங்கு டாலர்
- காலனிய சிங்கப்பூர்
- நீரிணை குடியேற்றங்கள்
- நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் பட்டியல்
- மலாக்கா பிரித்தானிய முடியாட்சி