பினா
பினா
பினா-எட்டாவா, எட்டாவா | |
|---|---|
நகரம் | |
மேல்:பினா சந்திப்பு தொடருந்து நிலையம் அடியில்: ஜெ பி பினா அனல் மின்நிலையம் | |
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பினா நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 24°10′48″N 78°12′0″E / 24.18000°N 78.20000°E | |
| நாடு | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| கோட்டம் | போபால் கோட்டம் |
| மாவட்டம் | சாகர் மாவட்டம் |
| அரசு | |
| • நிர்வாகம் | பினா நகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 64 km2 (25 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 51 |
| ஏற்றம் | 412 m (1,352 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 64,529 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி மொழி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 |
| அஞ்சல் சுட்டு எண் | 470113,470118, 470124, 464240 |
| வாகனப் பதிவு | MP-15, MP-08, MP-40 |
பினா (Bina) (formerly known as Bina-Etawa or Etawa), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாகர் மாவட்டத்தில் அமைந்த நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இந்நகரத்திற்கு அருகே பாயும் பினா ஆற்றினை ஒட்டி இதற்கு பினா நகரம் பெயரிடப்பட்டது. இது மாவட்டத் தலைமையிடமான சாகர் நகரத்திற்கு வடமேற்கே 73.7 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் போபால் நகரத்திற்கு வடகிழக்கே 158 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]இந்நகரத்தில் பாரத்-ஓமன் நாட்டின் கூட்டிணைப்பில் இயங்கும் பினா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆண்டிற்கு 7.8 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது[1] . ஜெ பி குழுமத்தின் 1,200 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம் உள்ளது.[2]பினா பகுதியின் கோதுமை விளைவிப்பதுடன், வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலைகளைக் கொண்டது.
புவியியல்
[தொகு]இந்நகரத்தைச் சுற்றி பினா ஆறு உள்ளிட்ட 5 ஆறுகள் பாய்கிறது. அவைகள்:
- மோட்டிச்சூர் ஆறு
- பேட்வா ஆறு
- நாராயணி ஆறு
- சிலா ஆறு
பண்டைய ஏரண் நகரம் அருகே பினா நகரம் உள்ளது.பினா நகரம் போபால் மற்றும் ஜான்சி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்நகரத்தின் நீர் ஆதாரங்கள் பினா ஆறு மற்றும் பேட்வா ஆறுகள் ஆகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,356 குடியிருப்புகள் கொண்ட பினா நகரத்தின் மக்கள் தொகை 64,529 ஆகும். அதில் ஆண்கள் 33,577 மற்றும் 30,952 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.9%. ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 14,438 மற்றும் 587 ஆக உள்ளனர். இந்து சமயத்தினர் 85.01%, இசுலாமியர் 7.03%, சமணர்கள் 5.94%, கிறித்தவர்கள் 0.99%, சீக்கியர்கள் 0.83% மற்றும் பிற சமயத்தினர் 0.20% வீதம் உள்ளனர்.[4]
போக்குவரத்து
[தொகு]ஆறு நடைமேடைகள் கொண்ட பினா சந்திப்பு தொடருந்து நிலையம் கீழ்கண்ட நகரங்களை இருப்புப்பாதைகளுடன் இணைக்கிறது.[5]
- ஜான்சி - குவாலியர்-ஆக்ரா-மதுரா, தில்லி
- விதிஷா, போபால், இடார்சி, பேதுல்- நாக்பூர்
- சாகர்-கட்னி-ஷடோல்-பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்)
- அசோக் நகர்-குணா-பரண்-கோட்டா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bharat Oman Refineries Limited". Bharat Oman Refineries Limited. Archived from the original on 14 December 2007.
- ↑ "Jaypee Group | Businesses-Power". Archived from the original on 25 November 2013. Retrieved 2013-11-04.
- ↑ "Profile of Bina Etawa, History of Bina, Facts About Bina". bina-etawa.mponline.in. Retrieved 2023-11-11.
- ↑ Bina- Etawa Population, Religion, Caste in Sagar District, Madhya Pradesh - Census 2011
- ↑ Bina Junction railway station