பிந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிந்து
ActressBindu.jpg
2012இல் பிந்து
பிறப்புபிந்து தேசாய்
17 ஏப்ரல் 1951 (1951-04-17) (அகவை 70)
வல்சாடு, பம்பாய் ஸ்டேட், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போது குசராத்து, இந்தியா)
செயற்பாட்டுக்
காலம்
1962 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சம்பக்லால் ஜவேரி

பிந்து (Bindu) 1951 ஏப்ரல் 17 அன்று பிறந்த இவர் ஒரு இந்திய நடிகையாவார். 1970 களில் பிரபலமானவர், பல விருதுகளுக்கான பரிந்துரைகளை பெற்றார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்,[1] மேலும், "காடி படாங்"(1970) படத்தில் "சப்னம்" என்ற அவரது பாத்திரத்திற்காக மிகவும் நினைவுபடுத்தப்பட்டவர் [2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

குசராத்துமாநிலம் வல்சாடு மாவட்டம், ஹனுமான் பக்தா என்ற சிறு கிராமத்தில் திரைப்பட தயாரிப்பாளர் நானுபாய் தேசாய் மற்றும் அவரது மனைவி ஜோத்ஸனா ஆகியோருக்கு பிந்து பிறந்தார். பிந்துவின் வெற்றிக்கான பாதை எளிதான ஒன்று அல்ல. 13 வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். மூத்த மகளாக இருந்ததால், பணத்தை சம்பாதிப்பது இவர் மேல் சுமத்தப்பட்டது, குடும்ப பாரம் இவரது தோள்களில் விழுந்தது.[3] பிந்து கல்லூரி பட்டதாரி மானவியாக "அன்பத்" (1962) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அப்போது அவர் 11 வயதில் இருந்தார்.

தொழில்[தொகு]

1969 இல் பிந்து நடித்த "இட்டஃபக்" மற்றும் "தொ ரஸ்த்" ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றது. இங்கிருந்து அவர் சக்தி சாமந்தாவின் "காடி பத்தாங்" (1970) படத்தில் தனது வெற்றி கதையை எழுதினார், அதில் "மேரா நாம் சப்னம்" என்ற பாடலுக்கு இவர் நடனமாடியது இன்றும் கூட இது ஒரு சிறப்பம்சமாகும் [4]

சொந்த வாழ்க்கை[தொகு]

பிந்து அவரது குழந்தை பருவ அன்பானதாகும், இவர் தனது அடுத்த அண்டைவீட்டுக்காரரான் சம்பக்லால் ஜவேரியை மணந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தற்போது அவர் புனே கோர்காவன் பார்க் என்ற இடத்தில் வசிக்கிறார். அவர் டெர்பியில் உறுப்பினராக உள்ளார், மேலும் புனேயில் ரேஸ் கோட்டத்தில் அடிக்கடி காணப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Bindu". jointscene.com. மூல முகவரியிலிருந்து 11 August 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 August 2010.
  2. "Shabnam Still Gets Fan Mail". Indian Express. 4 December 2010. http://www.indianexpress.com/news/shabnam-still-gets-fan-mail/720458/0. பார்த்த நாள்: 7 May 2013. 
  3. "Bindu Desai Biography". bollycurry.com. பார்த்த நாள் 2 August 2010.
  4. "Bindu Portrait". bollywood501.com. மூல முகவரியிலிருந்து 8 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 August 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bindu (actress)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்து&oldid=3249857" இருந்து மீள்விக்கப்பட்டது