பிந்தியபாசினி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தியாவாசினி தேவி
பிறப்புமுஜாஃபர்பூர், பிகார், இந்தியா
இறப்பு18 ஏப்ரல்2006
கங்கர்பாக், பாட்னா, பிகார், இந்தியா
பணிநாட்டுப்புற இசைக் கலைஞர்
அறியப்படுவதுஇந்திய நாட்டுப்புற இசை
வாழ்க்கைத்
துணை
ஷேதேவேஷ்வர் சந்திரா வர்மா
பிள்ளைகள்இரு மகன்கள்- (சநதோஷ் குமார் சின்ஹா, சுதிர் குமார் சின்ஹா) மற்றும் ஒரு மகள்- (புஷ்பாராணி மது)
விருதுகள்பத்மஸ்ரீ
சங்கீத நாடக அகாடமி விருது
சங்கீத நாடக அகாடமி உதவித் தொகை பெற்றவர்
அகில்யாபாய் விருது

பிந்தியவாசினி தேவி, ஒரு இந்திய நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் நாட்டுப்புற இசையை ஊக்குவித்தவர். இவர் 2006ஆம் ஆண்டு இறந்தார். பாட்னாவில் விந்தியா கலா மந்திர் என்ற இசை அகாடமியை நிறுவினார். அகாடமி, லக்னோவின் பட்கண்டே பல்கலைக்கழகத்துடன் 55 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்டது. தற்போது, வித்யா கலா மந்திர் இசை அகாடமியை அவரது மருமகள் ஷோபா சின்ஹாவும், மகன் சுதிர் குமார் சின்ஹாவும் நிர்வகிக்கின்றனர்.[1] [2] இந்தியாவின் பீகார் மாநிலத்தில் முசாபர்பூரில் பிறந்த பிந்தியாவாசினி தேவி, மைதிலி, போஜ்புரி மற்றும் மாகஹி நாட்டுப்புற இசையில் நிபுணத்துவம் பெற்றவர். விவா கீத் [3] திரைப்படத்தில் சோட் துல்ஹா கே என்ற பிரபலமான பாடலையும் அவர் பாடியுள்ளார், மேலும் அவரது பல பாடல்கள் குறுவட்டு வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளன. [4]

இந்திய அரசின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருதை 1974 ஆம் ஆண்டில் பெற்றார்.. [5] 1991 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி வருடாந்திர விருதை அவருக்கு கொடுத்து சிறப்பித்தது.[6] [2] அதைத் தொடர்ந்து 2006 இல் அகாடமி பெல்லோஷிப்பைப் பெற்றார். [7] அவர் 1998 இல் மத்திய பிரதேச அரசிடமிருந்து அஹில்யா பாய் விருதைப் பெற்றார். [1] 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று பிந்தியவாசினி தேவி 86 வயதில் தனது கங்கர்பாக் இல்லத்தில் இறந்தார், அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Folk singer Bindhyavasini Devi is dead". One India. 18 April 2006. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Nitish condoles Bindhyavasini Devi's death". Web India News. 19 April 2006. Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Chhote Dulha Ke". Saavn. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  4. "ITunes". ITunes. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  5. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  6. "Folk singer Bindhyabasini Devi is dead". One India. 18 April 2006. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  7. "Sangeet Natak Akademi Ratna Puraskar". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Chhote Dulha Ke. Inreco — The Indian Record Mfg Co. 2010. ASIN B00LRY8J6U.
  • Palki Charal Awe. Inreco — The Indian Record Mfg Co. 2010. ASIN B00LSQ23T6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தியபாசினி_தேவி&oldid=3700780" இலிருந்து மீள்விக்கப்பட்டது