பிந்தநாத்
பிந்தநாத் | |
---|---|
Queen consort of Egypt Great Royal Wife Lady of The Two Lands Mistress of Upper and Lower Egypt, etc | |
![]() Bintanath depicted in the side statue of Ramsses at Louxor | |
துணைவர் | Ramesses II Merenptah? (possibly) |
வாரிசு(கள்) | A daughter whose name is not known |
அரச குலம் | 19th Dynasty of Egypt |
தந்தை | Ramesses II |
தாய் | Isetnofret |
அடக்கம் | QV71, Valley of the Queens, Thebes |
சமயம் | Ancient Egyptian religion |
Bintanath படவெழுத்துக்களில் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Bintanath (In Tomb) Daughter of Anath | ||||||||||
Bintanath (On stela) Daughter of Anath |
பிந்தநாத் ( Bintanath ) அல்லது பெந்தநாத் எகிப்திய பார்வோன் இரண்டாம் ராமேசசின் முதல் மகளும் பட்டத்தரசியுமாவார்[1]
பிந்தநாத் அவரது தாத்தா முதலாம் சேத்தியின் ஆட்சியின் போது பிறந்திருக்கலாம். ஐரது தாயார் ஐசேத்னோபிரெட், இரண்டாம் ராமேசசின் இரண்டு முக்கிய மனைவிகளில் ஒருவர். பிந்தநாத் என்பது செமிடிக் மொழியில், கானானிய தெய்வமான அனாத்தை குறிக்கிறது. இவருக்கு குறைந்தபட்சம் மூன்று சகோதரர்கள், <a href="./ராமேசசு_(இளவரசர்)" rel="mw:WikiLink">ராமேசசு</a>, <a href="./கெம்வெசேத்" rel="mw:WikiLink">கெம்வெசேத்</a> மற்றும் மெர்நெப்தாமற்றும் ஒரு சகோதரியும் இருந்தனர். இவருக்கு இவருடைய தாயின் பெயரால் ஐசேத்னோபிரெட் எனவும் பெயரிடப்பட்டது. [1]
பிந்தநாத்துக்கு ஒரு மகள் இருந்துள்ளார். அவள் அரசிகளின் சமவெளி உள்ள அவரது கல்லறையில் உள்ள ஓவியங்களில் தோன்றுகிறாள். அவளுக்கு அங்கு பெயரிடப்படவில்லை. ஆனால் தொல்லியல் அறிஞர் ஜாய்ஸ் டில்டெஸ்லியின் கூற்றுப்படி அவள் பெயரும் பிந்தநாத் என்றும் அவள் அடுத்த பாரோவான மெர்நெப்தாவை மணந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது கூற்றுப்படி, அல்-உக்சுரிலுள்ள மெர்நெப்தாவின் சிலையில் "பட்டத்தரசி பிந்தநாத்" என்று குறிப்பிடுகிறது. [2]
`வாழ்க்கை[தொகு]

பிந்தநாத் அல்-உக்சுரிலுள்ள ஒரு கோபுரத்தின் மீது இரண்டாம் ராமேசசின் 3 ஆம் ஆட்சியாண்டு தேதியிட்ட ஒரு காட்சியில் சித்தரிக்கப்படுகிறார். இவர் மன்னரின் மகள் என்றும், இளவரசிகளில் முதன்மையானவர் என்றும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து மெரிட்டாமென் இவரது சகோதையாக இருக்கிறார். பிந்தநாத் அபு சிம்பெல் கோயில்களில் இளவரசியாக இருமுறை தோன்றுகிறார். நெபெட்டாவியுடன் சேர்ந்து இவர் பெரிய கோவிலின் முகப்பில் தெற்கே உள்ள பெரிய சிலையைச் சுற்றி நிற்கிறார். கோவிலுக்குள் இருக்கும் தூண் ஒன்றில் அனுகேத் தேவிக்கு மலர்களை வழங்குவது போல் காட்சியளிக்கிறார். [3]
மரணம் மற்றும் அடக்கம்[தொகு]
இவர் ராமேசசின் முதல் மகளாக இருந்தபோதிலும், நீண்ட காலம் வாழ்ந்த தந்தையை விட அதிகமாக வாழ்ந்த சில குழந்தைகளில் இவரும் ஒருவர். மெரென்ப்டாவால் அபகரிக்கப்பட்ட ஒரு சிலையில் அவள் சித்தரிக்கப்படுகிறாள். [1] அவர் தனது சகோதரர் மெர்னெப்தாவின் ஆட்சியின் போது இறந்தார் மற்றும் அரசிகளின் சமவெளியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [1]

பிந்தநாத்தின் பெயர் கல்லறையில் சற்று வித்தியாசமான எழுத்துப்பிழைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. [4] பிந்தநாத் ஒசிரிசு மற்றும் நெப்டிசுக்கு முன் காட்டப்பட்டுள்ளார். ராணி பிந்தநாத் அவரது பயரிடப்படாத மகளுடன் சித்தரிக்கப்படுகிறார். இவரது கல் சவப்பெட்டிபின்னர் ஒருவரால் அபகரிக்கப்பட்டது. [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 Dodson, Aidan and Hilton, Dyan. The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson. 2004. ISBN 0-500-05128-3, p.170 பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Dodson & Hilton, p.170" defined multiple times with different content - ↑ Tyldesley, Joyce. Ramesses: Egypt's Greatest Pharaoh. Penguin. 2001. ISBN 0-14-028097-9
- ↑ 3.0 3.1 Kitchen, K.A., Ramesside Inscriptions, Translated & Annotated, Translations, Volume II, Blackwell Publishers, 1996
- ↑ Lepsius, Denkmahler University of Halle Website பரணிடப்பட்டது மார்ச் 9, 2007 at the வந்தவழி இயந்திரம்