பித்யுத் பிரபா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்யுத் பிரபா தேவி (Bidyut Prabha Devi 12 ஜூலை 1926 - 28 ஜனவரி 1977) இந்தியாவைச் சேர்ந்த ஒடியா கவிஞர் ஆவார். ஒடியா இலக்கியத்தில் சிறந்த பெண் கவிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.

சுயசரிதை[தொகு]

பித்யுத் பிரபா 1926 ஜூலை 12 ஆம் தேதி கட்டாக் மாவட்டத்தில் ஜின்காடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். எழுத்தாளரும் தொகுப்பாளருமான நிமய் சரண் தாஸ் மற்றும் ரேகா தேவியின் இரண்டாவது மகள் இவர் ஆவார். இவரது பெற்றோர், ஒரு பாரம்பரியவாதிகள் மற்றும் பழமைவாதிகள் என்பதால், கட்டாக் நகரத்தின் பம்பிசாஹியில் வசித்து வந்தனர். பித்யுத் பிரபாவுக்கு ஒரு சகோதரரும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்; அவரது தங்கை புன்யா பிரபா தேவியும் ஒரு எழுத்தாளர் ஆவார்.[1]

இவர் தனது தந்தை நிமய் சரண் தாஸின் உந்துதலால் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது குழந்தை பருவத்தில், அவர் பல பரவலாக அறியப்பெற்ற ஒடியா கவிஞர்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். [2]

ஜூலை 4, 1949 இல், இவர் ஒரிசா செயலகத்தில் பணியாற்றும் பஞ்சனன் மொஹந்தியை மணந்தார்.[3]

படைப்புகள்[தொகு]

பித்யுத் பிரபா 1940 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கவிதைகள் இலக்கிய இதழ்களில் வெளியிடப்பட்டன, இவரின் மூத்த சகோதரி பசாந்தியுடன் இணைந்து சில கவிதைகள் எழுதியிருந்தார். இவர் தனது முதல் கவிதைத் தொகுப்பான சபிதாவை 1944 இல் வெளியிட்டார், இது பெரும்பாலும் ஒரிசாவின் பெருமைகளைப் போற்றும் தேசபக்தியினை கருவாகக் கொண்டிருந்தது.[4]

கவிதைத் தொகுப்பு[தொகு]

  • சபிதா (1947)
  • உத்கல் சரஸ்வதா பிரதிவா (1947)
  • கனகஞ்சலி (1948)
  • மரிச்சிகா (1948)
  • பிஹயாசி (1949)
  • பண்டெனிகா (1950)
  • ஸ்வப்னதீப் (1951)
  • ஜாரா சியுலி (1957)
  • ஜஹாகு ஜீ (1957)

அங்கீகாரம்[தொகு]

1950 ஆம் ஆண்டில், பித்யுத் பிரபாவின் உட்கல் சரஸ்வதா என்ற நூல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உத்கல் பல்கலைக்கழகத்தால் கவிதை நூலாக பரிந்துரைக்கப்பட்டது.[5] பித்யுத் தேவி ஒடியா இலக்கியத்தின் முக்கிய பெண் கவிஞர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுகிறார். அவரது கவிதைத் தொகுப்பு பித்யுத்பிரப சஞ்சாயனா 1962 இல் ஒடிசா சாகித்ய அகாதமி விருதை வென்றது

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்யுத்_பிரபா_தேவி&oldid=3425667" இலிருந்து மீள்விக்கப்பட்டது