பித்துண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்துண்டா என்பது பண்டைய கலிங்க இராச்சியத்தில் இருந்த ஒரு துறைமுக நகரம். இது இந்தியாவின் கிழக்குக்கரையில் அமைந்திருந்தது. இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தை உள்ளடக்கியிருந்த இரு பழைய இராச்சியம் ஒன்றின் தலைநகரமாக பித்துண்டா இருந்தது. இவ்விடம் தற்கால மசூலிப்பட்டினத்துக்கு அண்மையிலேயே உள்ளது.[1] பித்துண்டா, சிக்காகோலாவுக்கு அண்மையில் உள்ள பாலூருக்கும், கலிங்கப்பட்டினத்துக்கும் தெற்கே அமைந்திருந்ததாக சில்வா லெவி கருதுகிறார்.[2]

மகாவீரர் காலத்தில் பித்துண்டா ஒரு முக்கிய மையமாக விளங்கியதாகவும், சம்பாவில் (இன்றைய வியட்நாம்) இருந்து வணிகர்கள் இங்கே அடிக்கடி வந்துபோனதாகவும் சமண நூலான உத்தரதியான சூத்திரம் விவரிக்கிறது.[2] காரவேலன் (கிமு 209 - 170) இந்நகரை அழித்ததாக ஆத்திகும்பா கல்வெட்டிலிருந்து அறிய முடிகிறது.[1] கலிங்கத்துக்கும், தமிழ் அரசுகளின் கூட்டமைப்புக்கும் இடையேயான போரின்போது இது நிகழ்ந்தது. இந்நகரைக் கைப்பற்றிய காரவேலன் நகரை அழித்துக் கழுதை பூட்டி உழுததாகத் தெரிகிறது.[3] பித்துண்டா, பெரிப்பிளசிலும், தொலமியின் புவியியலிலும் (கிபி 90 - 168) பிதுண்ட்ரா எனக் குறிக்கப்பட்டுள்ளது.[4]

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ramesh Chandra Majumdar, Anant Sadashiv Altekar (1986). Vakataka - Gupta Age Circa 200-550 A.D.. Motilal Banarsidass Publ.. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0026-5. http://books.google.ca/books?id=OswUZtL1_CUC&pg=PA68&lpg=PA68. 
  2. 2.0 2.1 Balabhadra Ghadai (July 2009). "Maritime Heritage of Orissa" (PDF). Orissa Review. பார்க்கப்பட்ட நாள் 2010-11-25.
  3. Romila Thapar (2004). Early India: From the Origins to AD 1300. University of California Press. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-24225-4. http://books.google.ca/books?id=-5irrXX0apQC&pg=PA212. 
  4. Nihar Ranjan Patnaik (1997). Economic history of Orissa. Indus Publishing. பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7387-075-6. http://books.google.ca/books?id=1AA9W9_4Z9gC&pg=PA131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்துண்டா&oldid=1864628" இலிருந்து மீள்விக்கப்பட்டது