பிணக்கு மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிணக்கு மேலாண்மை[தொகு]

        பிணக்கை மோதல் என்று கூறலாம்.பிணக்கு என்பது இதுதான் என்று உறுதியாக கூறமுடியாது. பெரும்பாலும் சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் என்பவையே பிணக்காக உருவெடுக்கிறது. இரு பெரும் பிரிவுகள், உணர்ச்சி மோதல், பகை மனப்பான்மை, எதிர் அணிகள், வெறுப்புணர்வு, மாறுபட்ட நம்பிக்கைகள் இவற்றின் விளைவாக பிணக்கு உருவாகிறது.பிணக்குகளைத் தவிர்ப்பதற்கும், தீய விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிமுறைகள் உள்ளன. இதுவே பிணக்கு மேலாண்மை என்று அழைக்கப்படுகிறது.

பிணக்கின் வகைகள்[தொகு]

       குறிக்கோள் சச்சரவு
       அறிவுசால் சச்சரவு
       உணர்வுசால் சச்சரவு

பிணக்கு மேலாண்மை நுட்பங்கள்[தொகு]

      கோபம் எதன் மீது? சற்று நிதானித்துப் பார்க்க வேண்டும். பல வேளைகளில் நாம் நம் பிரச்சினையை விட்டு விட்டு மற்றவர்கள் மீது கோபப்படுகிறோம். கோபம் மனிதர்கள் மீது அல்ல என்பதை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிணக்குத் தீர்மானங்கள்[தொகு]

     பிணக்கை நீக்குதல், பேசாதிருத்தல், பேச்சைக் குறைத்தல் மற்றும் பிணக்கை விட்டு விடுதல் போன்ற செயல்பாடுகளால் பிணக்கு மேலாண்மையில் ஒருவர் செயல்படமுடியும்.போட்டியிடுதல், சமரசம் செய்து கொள்ளல், இணைந்து கொள்ளல், தவிர்த்தல் மற்றும் வசதியை ஏற்படுத்துதல் போன்ற பண்புகளால் பிணக்கு மேலாண்மையை செயல்படுத்த முடியும் என்று தாமஸ் மற்றும் கில்மேன் கூறுகின்றனர்.

சான்றாதாரம்[தொகு]

     https://en.wikipedia.org/wiki/Conflict_management
     ஆளுமை மேம்பாடு(டிசம்பர் 2010): பிணக்கு மேலாண்மை பக் 125-126 முனைவர் இரா.சாந்தகுமாரி மற்றும் ச.வைரவராஜ்: சாந்தா 
     பப்ளிஷர்ஸ், சென்னை-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணக்கு_மேலாண்மை&oldid=2722868" இருந்து மீள்விக்கப்பட்டது