பிட்டி
| Nickname: பக்சிபிட்டி | |
|---|---|
| புவியியல் | |
| அமைவிடம் | அரபிக்கடல் |
| ஆள்கூறுகள் | 10°46′31″N 72°32′03″E / 10.77528°N 72.53417°E |
| தீவுக்கூட்டம் | இலட்சத்தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| மொத்தத் தீவுகள் | 1 |
| பரப்பளவு | 0.036 km2 (0.014 sq mi) |
| கரையோரம் | 0.7 km (0.43 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 2 m (7 ft) |
| நிர்வாகம் | |
| ஒன்றியப் பகுதி | ஒன்றியப் பகுதி (இந்தியா) , இலட்சத்தீவுகள் |
| மாவட்டம் | இலட்சத்தீவுகள் |
| தீவுக்கூட்டம் | இலாக்காடிவ் தீவுகள் |
| தாலுகா | கவரத்தி |
| இந்தியாவின் நிர்வாக அலகுகள் | கவரத்தி |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 0 |
| அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் | IN-LD-05[1] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
பிட்டி (Pitti) என்பது இந்தியாவின் இலட்சத்தீவுகள் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்கள் வசிக்காத பவளத் தீவாகும். பக்சிபிட்டி என்ற பெயராலும் இத்தீவு அழைக்கப்படுகிறது. பக்சி என்பது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் "பறவை" என்று பொருள்படும்.
புவியியல்
[தொகு]10°46′N 72°32′E / 10.767°N 72.533°E என்ற புவியியல் ஆள்கூறுகளில் பிட்டி தீவு அமைந்துள்ளது. கவரத்தி தீவுக்கு வடக்கே சுமார் 24 கிமீ, அகத்தி தீவுக்கு கிழக்கே 37 கிமீ மற்றும் அமினி தீவின் தென்மேற்கே 42.5 கிமீ தொலைவில் இத்தீவு அமைந்துள்ளது.[2] இந்தத் தீவு தாழ்வாகவும் மற்றும் வறண்டதாகவும் உள்ளது. போதுமான நங்கூரமிடும் இடங்கள் இல்லாததால், தீவை அணுகுவது கடினமாக உள்ளது. கல்பேனி பவளப்பாறையின் ஒரு பகுதியாக இருக்கும் இலட்சத்தீவில் இதே பெயரில் மற்றொரு தீவும் உள்ளது.
பிட்டி தீவு 300× 200 மீட்டர் பரப்பளவில் தாவரங்கள் ஏதுமில்லாமல் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் ஓர் இருண்ட பாறையும், பல கல்திட்டைகளும் உள்ளன.[3]
சூழலியல்
[தொகு]புகைப் பழுப்பு நிற ஆலா, பெரிய கொண்டை ஆலா, பழுப்பு ஆலா போன்ற கடற்பறவைகள் இத்தீவில் உள்ளன. பறவைகள் உலர்ந்த பவள இடிபாடுகளில் அருகருகே கூடு கட்டுகின்றன, ஆனால் ஒன்றோடொன்று கலக்காமல் கட்டுகின்றன. சுற்றி எந்த பாதுகாப்புப் பாறைகளும் இல்லாததால் பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் பருவகால முறை உள்ளது. இந்தத் தீவு அவ்வப்போது அலை நடவடிக்கை மூலம் கழுவப்படுகிறது. எனவே இங்கு குவானோ எனப்படும் பறவை எச்சம் குவிவது இல்லை.[4]
பிட்டி கரை
[தொகு]அமினி தீவின் அதே கரையில், பெரும்பாலும் நீரில் மூழ்கிய தீவாக உள்ள பிட்டி கரையின் தெற்கு முனையில் பிட்டி அமைந்துள்ளது. வடகிழக்கு-தென்மேற்கு அச்சில் அமைந்துள்ள பிட்டி கரை, 49 கி.மீ நீளமும், வடக்குப் பகுதியில் 2 முதல் 7 கி.மீ அகலமும், தெற்குப் பகுதியில் 18 கி.மீ அகலமும் கொண்டதாகும்.[4] 11ஆவது இணையான வடக்கு என்பது பூமியின் பூமத்திய ரேகைத் தளத்திலிருந்து 11 பாகை வடக்கே ஓர் அட்சரேகை வட்டமாக உள்ளது. பிட்டி கரை பெரும்பாலும் நீரில் மூழ்கிய தீவாகவே உள்ளது.
நிர்வாகம்
[தொகு]பிட்டி தீவு இந்திய ஒன்றியப் பகுதியின் இலட்சத்தீவுகளில் உள்ள கவரத்தி தாலுகாவிற்குச் சொந்தமானது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Lakshadweep – Pitti". Oceandots. Archived from the original on 23 December 2010. Retrieved 17 February 2012.
- ↑ National Geospatial-Intelligence Agency (2005). Prostar Sailing Directions 2005 India & Bay of Bengal Enroute. ProStar Publications. p. 103. ISBN 9781577856627. Retrieved 17 February 2012.
- 1 2 Zacharias, V.J.; Kurup, Deepakumar Narayana (1994). "Birds of Lakshadweep Islands". Forktail (10): 49–64 இம் மூலத்தில் இருந்து 12 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120112215302/http://www.orientalbirdclub.org/publications/forktail/10pdfs/Kurup-Lakshadweep.pdf. பார்த்த நாள்: 17 February 2012.
- ↑ "Tehsils info" (PDF). Archived from the original (PDF) on 21 July 2011. Retrieved 29 April 2016.
- Mondreti, R., Davidar, P. & Grémillet, D. (2018). "Illegal egg harvesting and population decline in a key pelagic seabird colony of the Eastern Indian Ocean". Marine Ornithology. 46: 103–107.