பிட்ஜட் ஸ்பின்னர்
Jump to navigation
Jump to search
சொடுக்குச் சுழலி (Fidget Spinner) என்பது சிறுவர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட விளையாட்டுப் பொம்மை ஆகும். கேதரின் எட்டிங்கர் என்ற பெண்மணி முதன் முதலில் இக்கருவியைப் புனைந்தார்.[1]
வெண்கலம் பித்தளை போன்ற உலோகங்களால் ஆன பேரிங் இக்கருவியின் நடுவில் உள்ளது. 1990களில் உருவாக்கப்பட்ட போதும் 2017 ஆம் ஆண்டில் இது பிரபலமானது. ஆட்டிசம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கவனத்தைக் கூர்மைப்படுத்த இந்த விளையாட்டுக் கருவி பயன்படுகிறது எனக் கருதுகிறார்கள்.
பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இப்பொம்மை செய்யப்பட்டாலும் மாணவர்கள் வகுப்பறைகளில் இதை வைத்துக்கொண்டு விளையாடுவதால் மாணவர்கள் படிப்பிலிருந்து கவனம் சிதறுகிறது என இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள சில பள்ளிகள் இந்த விளையாட்டுக் கருவியைத் தடை செய்துள்ளார்கள்.