பிடிக்கல பிடிக்கல (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிடிக்கல பிடிக்கல என்பது லண்டன் தீபம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு தொலைக்காட்சி நாடகத் தொடர். ஈழத் தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த நாடுகளில் எதிர்நோக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் ஆவணம் செய்வதாக 2006 ஆம் ஆண்டு முதல் வெளியாகிறது. இது சாம் பிரதீபன் மற்றும் றஜித்தா சாம்பிரதீபன் ஆகியோரின் எழுத்துருவிலும் இயக்கத்திலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.