உள்ளடக்கத்துக்குச் செல்

பிடன் டெஸ் நீஜஸ்

ஆள்கூறுகள்: 21°05′54″S 55°28′51″E / 21.09833°S 55.48083°E / -21.09833; 55.48083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிடன் டெஸ் நீஜஸ்
Snow Peak
Piton des Neiges, October 2003
உயர்ந்த புள்ளி
உயரம்3,070 m (10,070 அடி)[1]
புடைப்பு3,070 m (10,070 அடி)[2]
Ranked 82nd
பட்டியல்கள்Island high point 17th
அதி கூர்மைச் சிகரம்
World's most isolated peaks 14th
ஆள்கூறு21°05′54″S 55°28′51″E / 21.09833°S 55.48083°E / -21.09833; 55.48083
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புSnow Peak
பெயரின் மொழிபிரெஞ்சு
புவியியல்
Lua error in Module:Location_map at line 526: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Réunion" does not exist.
நிலவியல்
பாறையின் வயதுPliocene
மலையின் வகைகூட்டு எரிமலை
கடைசி வெடிப்பு20,000 ஆண்டுகளுக்கு முன்பு

பிடன் டெஸ் நீஜஸ் (Piton des Neiges) என்பது தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள மஸ்கரேன் தீவுக்கூட்டத்தில் காணப்படும் பிரான்சு எரிமலைத் தீவுகளில் ஒன்றான ரீயூனியனில் உள்ள உள்ள 3,069 மீ (10,069 அடி) [3] உயரமுள்ள ஒரு கூட்டு எரிமலையாகும். இது மடகாசுகருக்கு கிழக்கே சுமார் 800 கிலோமீட்டர் (500 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. பிடன் டெஸ் நீஜஸ் ரியூனியனில் உள்ள மிக உயரமான இடமாகும், மேலும் இது இந்தியப் பெருங்கடலில் உள்ள மிக உயரமான இடமாகக் கருதப்படுகிறது. பிடன் டெஸ் நீஜஸ் உயரத்தின் அடிப்படையில் 82வது இடத்தில் உள்ளது.

வரலாறும் புவியியலும்

[தொகு]

பிடன் டெஸ் நீஜஸ், ரீயூனியன் எரிமலைப் பகுதியால் உருவானது. இது சுமார் இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து வெளிவந்தது.[சான்று தேவை] இந்த எரிமலை 20,000 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ளது. ரீயூனியன் சுமார் முப்பது இலட்சம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது; தீவுக்கூட்டத்தில் உள்ள மற்ற இரண்டு தீவுகளான மொரிசியசு மற்றும் இரோட்ரிக்சு ஆகியவை முறையே 78 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை.

பிடோன் டெஸ் நீஜஸ், ரீயூனியனின் வடமேற்கு பகுதியின் மூன்றில் இரண்டு பங்கை கொண்டுள்ளது. [4] மிகவும் துடிப்பான பிடோன் டெ லா ஃபோர்னைஸ் எரிமலை மீதமுள்ள பகுதியைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது மூன்று பெரிய எரிமலைவாய் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ளது. இதன் பெயருக்கு ஏற்றவாறு, குளிர்காலத்தில் இதன் உச்சியில் சிலசமயம் பனி காணப்படும். உலகின் உயரமான சிக,ங்களில் பிடோன் டெஸ் நீஜஸ் உலகில் 14வது இடத்தில் உள்ளது. [5]

இந்தத் தீவின் பூக்கும் தாவரங்கள் அகணியத் தன்மையைக் கொண்டுள்ளன (சுமார் 225); இவை பிட்டன் டெஸ் நெய்ஜசின் கீழ் சரிவுகளில் காணப்படுகின்றன.

கெய்ட் டி லா கேவர்ன் டுஃபோர் அருகே ஒரு அகன்ற காட்சி.

நடைபயணம்

[தொகு]
வடமேற்கு மையத்தில் (இளம் பழுப்பு நிறப் பகுதி) பிடன் டெஸ் நெய்ஜசின் முகடு சிகரத்துடன், மூன்று மைய பனிபறிபள்ளங்களுடன் கூடிய ரீயூனியன் தீவு. சிகரத்தின் தென்கிழக்கில் உள்ள பள்ளத்தின் விளிம்பில் உள்ள வெள்ளைப் புள்ளி ஆல்பைன் குடில் ஆகும்.

சிகரத்துக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன: ஒன்று சர்க்யூ டி சலாஸியிலிருந்து, மற்றொன்று சர்க்யூ டி சிலாவோஸிலிருந்து, மூன்றாவது பாதை பிளைன் டெஸ் காஃப்ரெஸிலிருந்து செல்கின்றன. அவை சிகரத்திற்கு கீழிருந்து ஒரு மணி நேர நடைப்பயணத்தில் ஒரு பணியாளர்கள் கொண்ட மலை குடிலருகே சந்திக்கின்றன.

சிலாவோஸிலிருந்து தொடங்கும் மலையேற்றம் 8.9 மைல்கள் நீளமானது, பொதுவாக மலையேற்றத்தை முடிக்க சராசரியாக 8.5 மணிநேரம் ஆகும். [6] இந்த மலையேற்றம் ஒரே நாளில் ஏறக்கூடியது என்றாலும், பெரும்பாலான மலையேற்ற வீரர்கள் மலைக் குடிலான கீட் டி லா கேவர்ன் டுஃபோரில் இரவில் தங்க விரும்புகின்றனர். 1,736 மீட்டர்கள் (5,696 அடி) உயரம் காரணமாக இந்த மலையேற்றம் சவாலானதாகக் கருதப்படுகிறது.

லா ப்ளைன் டெஸ் காஃப்ரெஸிலிருந்து செல்லும் மலையேற்றம் மிக நீண்டதாக, 19.6 மைல்கள் கொண்டதாக உள்ளது. [4] இங்கிருந்து இதன் உயரம் 4,691 அடிகள் (1,430 m) ஆகும்.

பிடன் டெஸ் நீஜஸ் மலையின் உச்சியில் சூரிய உதயக் காட்சி.
தென்கிழக்கில் இருந்து அதிகாலையில் பிடன் டெஸ் நீஜஸ் தோற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Africa Ultra-Prominences" Peaklist.org. Retrieved 2011-11-19. Note: Some sources give an elevation of 3,071 m for this peak.
  2. "World Ribus – Indian Ocean Islands". World Ribus. Retrieved 2024-12-25.
  3. "Reunion | History, Location, Map, Population, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2024-02-17. Retrieved 2024-02-21.
  4. 4.0 4.1 "Piton des Neiges from La Plaine des Cafres Hiking Trail, Cilaos, Reunion". Hiking Project (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-07-26.
  5. "World's Highest Topographically isolated summits | For UNESCO World Heritage Travellers". www.worldheritagesite.org. Retrieved 2024-07-26.
  6. "Piton des Neiges, Saint-Pierre, Réunion - 265 Reviews, Map | AllTrails". Retrieved July 26, 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடன்_டெஸ்_நீஜஸ்&oldid=4472236" இலிருந்து மீள்விக்கப்பட்டது