பிஜன் சௌத்ரி
பிஜன் சௌத்ரி (Bijan Choudhury) (1931–2012) என்பவர் வங்காளத்தில் பிறந்த ஓவியர் ஆவார், இந்தியாவில் கல்கத்தாவில் இருந்த ஓவியர்களில் குறிப்பிடத்தக்கவராக இவர் அறியப்பட்டார்.[1]
சௌத்ரி 1931 இல் வங்காளத்தில் (தற்போது வங்காளதேசம் ) உள்ள ஃபரித்பூரில் பிறந்தார். அவர் கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் படித்தார், ஆனால் அவரது மார்க்சிய நம்பிக்கைகள் காரணமாக பொதுவுடமை செயல் பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் அவர் பட்டம் பெறுவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார்.[2] அவர் வங்காளத்திற்குத் திரும்பி டாக்கா கலைக் கல்லூரியில் (இப்போது டாக்கா பல்கலைக்கழகம் பட்டம் பெற்றார்.[3]
1960 இல் சமகால கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய கலைஞர்களில் சௌத்ரியும் ஒருவர். 1964 இல் நிகில் பிஸ்வாஸ், பிரகாஷ் கர்மகர், ராபின் மொண்டல், ஜோகன் சௌத்ரி மற்றும் தராஜ் சௌத்ரி ஆகியோருடன் இணைந்து வங்காள கலைப் பள்ளியின் மரபுகளிலிருந்து விடுபடுவதற்காக கல்கத்தா ஓவியர்களை நிறுவினார். 70களின் பிற்பகுதியில் அவர் இந்திய கலை மற்றும் ஓவிய கல்லூரியின் தலைவரானார்.
சௌத்ரி 16 மார்ச் 2012 அன்று காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகு, மே 2012 இல் வங்காள கலைக்கூடத்தில் வங்காள நுண்கலைக் கூடத்தால் அவரது ஓவியங்களின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sarkar, Sandip (7 April 2006). "Romantic tales of lonely women". The Telegraph (Calcutta) இம் மூலத்தில் இருந்து 20 May 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060520174306/http://www.telegraphindia.com/1060407/asp/atleisure/story_6066826.asp.
- ↑ Sengupta, Ratnottama (19 March 2012). "Bengal’s contemporary art loses a gem". The Times of India இம் மூலத்தில் இருந்து 3 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103125735/http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JS00vMjAxMi8wMy8xOSNBcjAwNDAx. பார்த்த நாள்: 4 September 2016.
- 1 2 "Bijan Choudhury exhibition at Bengal Gallery". The Daily Star (Dhaka). 22 May 2012. http://www.thedailystar.net/news-detail-235110.
- ↑ "Bijan Choudhury’s rare paintings on display". Dhaka Mirror. 30 May 2012. http://www.dhakamirror.com/art-culture/bijan-choudhurys-rare-paintings-on-display/.