பிச்சையா நாவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிச்சையா நாவலர் 'தாருகாபுரத் தலபுராணம்' என்ற நூலை இயற்றியவர்.[1] இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மலையடிக் குறிச்சி என்ற ஊரைச் சார்ந்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களுள் தாருகாபுரம் மத்தியசுதநாதர் கோவிலும் ஒன்று.[2] இங்குள்ள இறைவன்மேல் இயற்றிய தாருகாபுரத் தலபுராணம் பத்தொன்பது படலங்களும் எண்ணூற்று முப்பத்தாறு பாடல்களும் கொண்டது. இந்நூலை இயற்றி வெளியிடுவதற்காக அப்பகுதி குறுநில மன்னரிடம் பொருளுதவி கேட்டார், பொருள் கிடைக்காத நிலையில் இவர் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து பலரிடம் பொருளுதவி பெற்று இதனை வெளியிட்டார். இந்நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவி செய்த புரவலர்களின் பட்டியலை நூலின் பிற்பகுதியில் நன்றியோடு குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கோள்[தொகு]

  • தாருகாபுரத் தலபுராணம், ஆசிரியர்: பிச்சையா நாவலர், எக்கெல்சியர் பவர் அச்சகம், மதுரை-1935

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சையா_நாவலர்&oldid=2994453" இருந்து மீள்விக்கப்பட்டது