பிச்சு சாம்பமூர்த்தி
பிச்சு சாம்பமூர்த்தி | |
---|---|
பிறப்பு | பித்ரகுன்டா, சென்னை மாகாணம், இந்தியா | 14 பெப்ரவரி 1901
இறப்பு | 23 அக்டோபர் 1973 | (அகவை 72)
பணி | இசை விற்பன்னர் எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1928–1973 |
அறியப்படுவது | இசை அகாடமிகள் |
வாழ்க்கைத் துணை | ஆனந்தவல்லி |
விருதுகள் | பத்ம பூசண் சங்கீத கலாநிதி விருது |
பிச்சு சாம்பமூர்த்தி (Pichu Sambamoorthi) (1901-1973) ஒரு இந்திய மியூசிக்காலாஜிஸ்ட், எழுத்தாளர் மற்றும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில், இசை பற்றிய ஆய்வு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.[1] தென்னிந்திய இசை மற்றும் இசைக்கலைஞர்கள்,[2] சிறந்த இசையமைப்பாளர்கள் ,[3] தென்னிந்திய இசை ,[4] சுருதி வாத்யங்கள் [5] (ட்ரான்ஸ்) [5] மற்றும் லய வாத்தியங்கள்: காலம் காட்டும் கருவிகள் போன்ற பலத் தலைப்புகளில் இசை சம்பந்தமான நூல்களை எழுதியுள்ளார்.[6] 1972 ஆம் ஆண்டில் அவர் சென்னை இசை அகாடமியின் சங்கீத கலாநிதி விருது பெற்றார். 1971 ஆம் ஆண்டில்இந்திய அரசு அவருக்கு மூன்றாவது உயர்ந்த குடிமகனுக்கு வழங்கப்படும் கௌரவமான பத்ம பூஷன் விருது வழங்கியது.[7] 1963 ஆம் ஆண்டு சங்கீத் நாடக அகாடமி கூட்டாளர் விருது பெற்றார்.[8]
சுயசரிதை
[தொகு]1901 பிப்ரவரி 14 அன்று சென்னை மாகணத்தில் (தற்போது ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம்), பித்ரகுன்டா என்ற சிறிய ஊரில் பிறந்தார். சாம்பமூர்த்தி பொத்து கிருஷ்ணையா, எம். துரைசாமி ஐயர், எஸ். ஏ. இராமசாமி ஐயர் மற்றும் கிருஷ்ணசாமி பாகவதர் போன்ற பல்வேறு ஆசிரியர்களின் கீழ் வாய்ப்பாட்டு மற்றும் வயலின் பயிற்சி பெற்றார்.[9] அவர் 1928 ஆம் ஆண்டில், இராணி மேரி கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார், ஆனால் 1931 இல், ஜெர்மனிக்கு மாற்றினார், டச்சு அகாடமி மூலம் நிதி பெறப்பட்டு அகாடமியில் இசை பயிலரங்கில் ஆய்வு செய்தார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி, சென்னை பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகவும் பின்னர், இசைப் பயிற்சியாளராகவும் பணியில் சேர்ந்தார். 1961 ஆம் ஆண்டு வரை, சென்னையில் சங்கீத வாத்யாலயாவின் இயக்குநராக சேர்ந்தார். 1964 ஆம் ஆண்டில், திருப்பதி, ஸ்ரீ வெங்கடேஸ்வர பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1966 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்திற்குத் திரும்புவதற்குப் பின், இரண்டு ஆண்டுகள் அங்கு அவர் பணிபுரிந்தார்.[9]
ஆனந்தவல்லியை திருமணம் செய்த சாம்பமூர்த்தி, 72 வயதில், 1973 அக்டோபர் 23 அன்று இறந்தார்.[10] அவரது வாழ்க்கை மற்றும் தொழில் பற்றி 2001 ஆம் ஆண்டில் அவரது நூற்றாண்டு விழாவில், சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்ட ஃபுரபஷர் சாம்பமூர்த்தி த விஷனரி மியூசிக்கலாஜிஸ்ட் என்ற ஒரு புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [11]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Sambamurthy [Sambamoorthy], Pichu". Around Life.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Pichu Sambamoorthy (2007). A Dictionary of South Indian Music and Musicians of P. Sambamoorthy. Indian Music Publishing House.
- ↑ P. Sambamoorthy (1962). Great Composers. Indian Music Publishing House.
- ↑ P. Sambamoorthy. South Indian music. Indian Music Pub. House.
- ↑ 5.0 5.1 P Sambamoorthy (1957). Sruthi Vadyas (Drones). All India Handicrafts Board.
- ↑ P. Sambamoorthy (1959). Laya Vadyas: Time-keeping Instruments. All India Handicrafts Board.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "Sangeet Natak Akademi Fellowship". Sangeet Natak Akademi. Archived from the original on 2016-07-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ 9.0 9.1 "P Sambamoorthy on Open Library". Open Library. 2016. பார்க்கப்பட்ட நாள் 2 April 2016.
- ↑ "Sambamurthy [Sambamoorthy], Pichu". Around Life. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Prof. Sambamoorthy, the Visionary Musicologist. Madras Music Academy.