பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-2-[(2-குளோரோயெத்தில்)சல்பேனைல்]ஈத்தேன் | |
வேறு பெயர்கள்
பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு
எச்டி ஐப்ரிட்டு கந்தக கடுகு 1,1'-தயோபிசு[2-குளோரோயீத்தேன்] இருகுளோரோயிருயீத்தைல் சல்பைடு | |
இனங்காட்டிகள் | |
505-60-2 ![]() | |
Beilstein Reference
|
1733595 |
ChEBI | CHEBI:25434 ![]() |
ChEMBL | ChEMBL455341 ![]() |
ChemSpider | 21106142 ![]() |
EC number | 684-527-7 |
Gmelin Reference
|
324535 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19164 ![]() |
பப்கெம் | 10461 |
| |
UNII | T8KEC9FH9P ![]() |
பண்புகள் | |
C4H8Cl2S | |
வாய்ப்பாட்டு எடை | 159.07 g·mol−1 |
தோற்றம் | தூய நிலையில் நிறமற்றது. பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். இலேசான பூண்டு நெடி.[1] |
அடர்த்தி | 1.27 கி/மில்லி லிட்டர், நீர்மம் |
உருகுநிலை | 14.4 °C (57.9 °F; 287.5 K) |
கொதிநிலை | 217 °C (423 °F; 490 K) சிதைவடையும் 217 °C (423 °F) கொதிக்கும் 218 °C (424 °F) |
7.6 மில்லிகிராம்/லிட்டர் 20°செல்சியசில்[2] | |
கரைதிறன் | ஆல்ககால்கள், ஈதர், நீரகக்கரிமம், கொழுமியம், டெட்ரா ஐதரோபியூரான் போன்றவற்றில் கரையும் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும், நச்சு, கொப்புளம் உண்டாக்கும்,புற்றுநோய் ஊக்கி,சடுதிமாற்றி |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
தீப்பற்றும் வெப்பநிலை | 105 °C (221 °F; 378 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு (Bis(2-chloroethyl)sulfide) என்பது (ClCH2CH2)2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். கடுகு முகவர்கள் எனப்படும் செல்நச்சு மற்றும் கொப்புள முகவர்களின் குடும்பத்தில் பிசு(2-குளோரோயெத்தில்)சல்பை ஒரு முக்கிய உறுப்பினராகும். சில நேரங்களில் கடுகு வாயு என்று குறிப்பிடப்படும் இந்த சொல் தொழில்நுட்ப ரீதியாக தவறானது: பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு அறை வெப்பநிலையில் ஒரு திரவமாகும். போரில் இது திரவ துளிகளின் மெல்லிய மூடுபனி வடிவத்தில் சிதறடிக்கப்பட்டது.[4][5]
தயாரிப்பு
[தொகு]பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு பல்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகிறது. தெப்ரெட்சு தயாரிப்பு முறையில், கந்தக டைகுளோரைடு எத்திலீனுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது:
- SCl2 + 2C2H4 -> (ClC2H4)2S
இலெவின்சுடீன் செயல்முறையில் கந்தக இருகுளோரைடுக்குப் பதிலாக டைசல்பர் டைகுளோரைடு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] பின்னர் இச்செயல்முறை மறுக்கப்பட்டுள்ளது.[7]
- S2Cl2 + 2 C2H4 -> (ClC2H4)2S + 1⁄8 S8
மேயர் தயாரிப்பு முறையில், குளோரோயெத்தனால் மற்றும் சோடியம் சல்பைடில் இருந்து தயோடைகிளைகால் தயாரிக்கப்படுகிறது. மேலும் இதன் விளைவாக வரும் டையால் பின்னர் பாசுபரசு முக்குளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது:[8][9]
- 3(HOC2H4)2S + 2PCl3 -> 3(ClC2H4)2S + 2P(OH)3
மேயர்–கிளார்க்கு தயாரிப்பு முறையில், PCl3 சேர்மத்திற்குப் பதிலாக செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலம் (HCl) பயன்படுத்தப்படுகிறது:
- (HOC2H4)2S + 2HCl -> (ClC2H4)2S + 2 H2O
தயோனைல் குளோரைடு மற்றும் பாசுச்சீன் ஆகியவை மூச்சுத் திணறலைத் தடுக்கும் காரணிகளாகவும் குளோரினேற்றும் முகவராகவும் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவில் பயன்படுத்தப்பட்டால் இந்த சேர்மங்கள் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளன. அவை விளைபொருளில் அசுத்தங்களாகவே இருக்கும் என்பதால் அவை நச்சுத்தன்மையின் கூடுதல் வழிமுறைகளை உருவாக்க முடியும்.
வினைகள்
[தொகு]கடுகு வாயுவை ஆக்சிசனில் சிறந்த முறையில் எரிப்பதால் கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீருடன் கூடுதலாக ஐதரோகுளோரிக் அமிலமும் கந்தக அமிலமும் உருவாகின்றன:
- (ClC2H4)2S + 7 O2 -> 4 CO2 + 2 H2O + 2 HCl + H2SO4
பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு சோடியம் ஐதராக்சைடுடுடன் வினைபுரிந்து டைவினைல் சல்பைடைத் தருகிறது:
- (ClC2H4)2S + 2 NaOH -> (CH2\dCH)2S + 2 H2O + 2NaCl
சோடியம் ஈத்தாக்சைடும் இதே போல செயல்படுகிறது.
பாதுகாப்பு
[தொகு]தோலுடன் தொடர்பு கொள்ளும்போது அல்லது உள்ளிழுக்கும்போது, பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு என்பது ஒரு நச்சுப் பொருளாகும். இது ஒரு வலுவான ஆல்க்கைலேற்றும் முகவருமாகும். இது டிஎன்ஏ, ஆர்என்ஏ மற்றும் புரதங்களைப் பாதிக்கிறது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ FM 3–8 Chemical Reference handbook, US Army, 1967
- ↑ Mustard agents: description, physical and chemical properties, mechanism of action, symptoms, antidotes and methods of treatment. Organisation for the Prohibition of Chemical Weapons. Accessed June 8, 2010.
- ↑ "Pubchem".
- ↑ "Sulfur Mustard: Blister Agent". Centers for Disease Control and Prevention (in ஆங்கிலம்). 25 May 2023. Archived from the original on 2023-11-01. Retrieved 2023-12-28.
- ↑ Ghabili, Kamyar; Agutter, Paul S.; Ghanei, Mostafa; Ansarin, Khalil; Panahi, Yunes; Shoja, Mohammadali M. (2011). "Sulfur mustard toxicity: History, chemistry, pharmacokinetics, and pharmacodynamics". Critical Reviews in Toxicology 41 (5): 384–403. doi:10.3109/10408444.2010.541224. பப்மெட்:21329486.
- ↑ Stewart, Charles D. (2006). Weapons of mass casualties and terrorism response handbook. Boston: Jones and Bartlett. p. 47. ISBN 0-7637-2425-4.
- ↑ "Chemical Weapons Production and Storage". Federation of American Scientists. Archived from the original on August 11, 2014.
- ↑ E. M. Faber and G. E. Miller (1932). "β-Thiodiglycol". Organic Syntheses 12: 68. doi:10.15227/orgsyn.012.0068.
- ↑ Institute of Medicine (1993). Chapter 5: Chemistry of Sulfur Mustard and Lewisite. The National Academies Press. ISBN 0-309-04832-X.
- ↑ Kehe, Kai; Szinicz, Ladislaus (2005). "Medical aspects of sulphur mustard poisoning". Toxicology 214 (3): 198–209. doi:10.1016/j.tox.2005.06.014. பப்மெட்:16084004. https://archive.org/details/sim_toxicology_2005-10-30_214_3/page/n40.