பிசுவேசுவர் நந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுவேசுவர் நந்தி
Bishweshwar Nandi
பிறப்புதிரிபுரா, இந்தியா
குடியுரிமைஇந்தியா
பணிசீருடற்பயிற்சி விளையாட்டுப் பயிற்சியாளர்
வாழ்க்கைத்
துணை
சோம நந்தி (சீருடற்பயிற்சி விளையாட்டுப் பயிற்சியாளர்)

பிசுவேசுவர் நந்தி (Bishweshwar Nandi) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சீருடற்பயிற்சி விளையாட்டின் பயிற்சியாளராவார். [1][2][3] இவரும் ஒரு சிறந்த சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராக இருந்தார்.[2][4] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் இவருக்குப் பயிற்சியளித்தார். [1] நந்தி சீருடற்பயிற்சி விளையாட்டில் ஐந்து முறை தேசிய வெற்றியாளராக இருந்தார். 12 நிகழ்வுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் இந்திய சீருடற்பயிற்சி அணிக்கு ஆறு முறை தலைவராக நின்று வழிநடத்தினார். [4] ஒரு பயிற்சியாளராக இவர் புரிந்த சாதனைகளுக்காக துரோணாச்சார்யா விருது 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. [5][6]. தீபா கர்மாகர் இவரிடம் பயிற்சி பெற்ற சீருடற்பயிற்சி வீரர்களில் ஒருவராவார். பிசுவேசுவர் நந்தியின் மனைவி சோமா நந்தியும் ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு பயிற்சியாளராவார். [1][4][5]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Sarangi, Y. B. "Bishweshwar Nandi: 'Tokyo 2020 a big challenge'". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
  2. 2.0 2.1 Paul, Soumyadeep (2016-08-20). "The Maverick Coach Bishweshwar Nandi". The SportsRush (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
  3. The need is to make kids start gymnastics at a young age: Bishweshwar Nandi, written by Nitin Sharma, February 17, 2018, The Indian Express.
  4. 4.0 4.1 4.2 "She gave her foot to her detractors and now she is a Champion". www.theweekendleader.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
  5. 5.0 5.1 "Double joy for Dipa Karmakar as coach Bishweshwar Nandi gets Dronacharya award". The Indian Express (in ஆங்கிலம்). 2016-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
  6. Published:Mon, India com News Desk |; August 29; 2016 1:33pm (2016-08-29). "National Sports Day: PV Sindhu, Sakshi Malik, Dipa Karmakar and Jitu Rai conferred with Rajiv Gandhi Khel Ratna Award". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுவேசுவர்_நந்தி&oldid=3739756" இலிருந்து மீள்விக்கப்பட்டது