பிசுமாசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசுமாசின் (Bismacine) என்பது இலைம் நோய் எனப்படும் பன்முககோச நோய்க்கான மாற்று சிகிச்சைக்காக அமெரிக்க உயிரியல் நிறுவனம் தயாரித்த ஒரு மருந்தாகும். இம்மருந்தில் பிசுமத் பெருமளவில் கலந்துள்ளது. இலைம் நோய் சிகிச்சைக்காக பிசுமாசினை சிரைக்குள் செலுத்தி பயன்படுத்தப்பட்டபோது இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. [1] 2006 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு நுகர்வோரை பிசுமாசினை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தது. பிசுமாசின் பயனற்றது என்றும் மற்றும் ஆபத்தானது என்றும் அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Quirk M. (2006). "Alternative health therapy for Lyme disease results in death". Lancet Infect Dis 6 (8): 546. doi:10.1016/S1473-3099(06)70563-1. 
  2. "FDA Warns Consumers and Health Care Providers Not to Use Bismacine, also known as Chromacine". அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம். 2006-06-21. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமாசின்&oldid=3076477" இலிருந்து மீள்விக்கப்பட்டது