பிசுமத் ஆக்சிகுளோரைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
7787-59-9 ![]() | |
ChemSpider | 10606415 ![]() |
EC number | 232-122-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6328152 |
| |
UNII | 4ZR792I587 ![]() |
பண்புகள் | |
BiOCl | |
வாய்ப்பாட்டு எடை | 260.43 g·mol−1 |
தோற்றம் | முத்து போன்ற ஒளிரும் ஒளி பிரதிபலிப்புத் தன்மையுடன் கூடிய பளபளப்பான வெள்ளை படிகங்கள் |
அடர்த்தி |
|
மிகக் குறைவு | |
கரைதிறன் | அமிலங்களில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம், tP6[2] |
புறவெளித் தொகுதி | P4/nmm, No. 129 |
Lattice constant | a = 0.3887 நானோமீட்டர், c = 0.7354 நானோமீட்டர் |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிசுமத் ஆக்சிகுளோரைடு (Bismuth oxychloride) என்பது BiOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பழங்காலத்திலிருந்தே, குறிப்பாக பண்டைய எகிப்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பளபளப்பான வெள்ளை நிறத்திலான திடப்பொருளாகும். இதன் தட்டு போன்ற அமைப்பிலிருந்து ஒளி அலை குறுக்கீடு முத்து போன்ற ஒளிரும் ஒளி பிரதிபலிப்பைக் கொடுக்கிறது. முன்னதாக, இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டு வரை, பிசுமத் ஆக்சோகுளோரைடு பிசுமத்தைல் குளோரைடு என்று அழைக்கப்பட்டது. முத்து வெள்ளை நிறமி என்றும் அழைக்கப்படுகிறது.
கட்டமைப்பு
[தொகு]பிசுமத் ஆக்சிகுளோரைடின் கட்டமைப்பு Cl− எதிர்மின் அயனி, Bi3+ நேர்மின் அயனி மற்றும் O2− அயனிகளின் அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது (படத்தில் Bi = சாம்பல், O = சிவப்பு, Cl = பச்சை). இந்த அயனிகள் Cl–Bi–O–Bi–Cl–Cl–Bi–O–Bi–Cl என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, மாறி மாறி வரும் அயனிகள் (Cl−, O2−) மற்றும் நேர்மின் அயனிகள் (Bi3+) உள்ளன. அடுக்கு அமைப்பு பிசுமத் ஆக்சிகுளோரைடின் முத்து போன்ற பண்புகளை உருவாக்குகிறது.
தனிப்பட்ட அயனிகளின் ஒருங்கிணைப்பு சூழலில் கவனம் செலுத்தினால், பிசுமத் மையங்கள் ஒரு சிதைந்த சதுர எதிர்ப்பு பட்டக ஒருங்கிணைப்பு வடிவவியலை ஏற்றுக்கொள்கின்றன. Bi அணு நான்கு Cl அணுக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் Bi அணுவிலிருந்து 3.06 Å தொலைவில் சதுர முகங்களை உருவாக்குகிறது. மேலும் நான்கு O அணுக்கள் மற்ற சதுர முகத்தை உருவாக்குகின்றன. இவை ஒவ்வொன்றும் Bi இலிருந்து 2.32 Å தொலைவில் உள்ளன. O அணுக்கள் நான்கு Bi அணுக்களால் நான்முகியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.[2]
தயாரிப்பு
[தொகு]பிசுமத் குளோரைடுடன் தண்ணீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நீராற்பகுப்பு வினை நிகழ்ந்து பிசுமத் ஆக்சிகுளோரைடு (BiOCl) உருவாகிறது:
- BiCl3 + H2O → BiOCl + 2HCl
வினை
[தொகு]600 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தப்படும்போது, BiOCl ஆனது Bi24O31Cl10 ஆக மாறுகிறது. ஆர்ப்பே சேர்மம் என்று இது அழைக்கப்படுகிறது. இச்சேர்மம் ஒரு சிக்கலான அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது.[3][4]
பயன்கள்
[தொகு]பண்டைய எகிப்து காலத்திலிருந்தே பிசுமத் ஆக்சிகுளோரைடு அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சேர்மம் "கண் மை, தலைமுடி தெளிப்புகள், பொடிகள், நகப் பூச்சுகள் மற்றும் பிற அழகுசாதனப் பொருட்களில் காணப்படும் முத்து நிறமியின்" ஒரு பகுதியாகும்.[5]
BiOCl இன் தட்டு போன்ற அமைப்பு காரணமாக, இதன் தொங்கல்கள் நாக்ரே போன்ற ஒளியியல் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் இதன் பெயர் C.I. 77163. என அடையாளப்படுத்தப்படுகிறது.[6]
தோற்றம்
[தொகு]BiOCl இயற்கையில் அரிய கனிமமான பிசுமோக்லைட்டாகக் காணப்படுகிறது. இது மேட்லோக்கைட்டு கனிமக் குழுவின் ஒரு பகுதியாகும்.[7]
பிசுமத் ஆக்சிநைட்ரேட்டு என்ற ஒத்த சேர்மம் வெள்ளை நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C. (eds.). "Bismoclite". Handbook of Mineralogy (PDF). Vol. III (Halides, Hydroxides, Oxides). Chantilly, VA, US: Mineralogical Society of America. ISBN 0-9622097-2-4. Retrieved December 5, 2011.
- ↑ 2.0 2.1 Keramidas, K. G.; Voutsas, G. P.; Rentzeperis, P. I. (1993). "The crystal structure of BiOCl". Zeitschrift für Kristallographie 205 (Part 1): 35–40. doi:10.1524/zkri.1993.205.Part-1.35. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2968. Bibcode: 1993ZK....205...35K.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 572. ISBN 0080379419.
- ↑ Eggenweiler, U.; Keller, E.; Krämer, V. (2000). "Redetermination of the crystal structures of the 'Arppe compound' Bi24O31Cl10 and the isomorphous Bi24O31Br10". Acta Crystallographica Section B 56 (3): 431–437. doi:10.1107/S0108768100000550. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-7681. பப்மெட்:10877351.
- ↑ Völz, Hans G. et al. "Pigments, Inorganic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2006 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a20_243.pub2.
- ↑ Carrasco, F. 2009. Diccionario de Ingredientes Cosmeticos(Paperback)
- ↑ Bismoclite on Mindat.org